Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

நாகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.குகன் பிள்ளை தயாரிக்கும் படம் “ முருகவேல் “ இந்த படத்தில் சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

இரட்டை வேடங்களில் சத்யராஜ் நடிக்கும்
“ முருகவேல் “
நாகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.குகன் பிள்ளை தயாரிக்கும் படம் “ முருகவேல் “
இந்த படத்தில் சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அமலா பால் நாயகியாக நடித்துள்ளார். மற்றும், ரம்யாநம்பீசன், கஞ்சா கருப்பு, பப்லு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – லோகநாதன்
இசை – கோபி சுந்தர்
பாடல்கள் – அண்ணாமலை
இயக்கம் – ஜோஷி
படம் பற்றி இயக்குனர் ஜோஷி கூறியதாவது….
சத்யராஜ் இந்த படத்தில் தொழிலதிபராகவும், அரசால் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட புதிதாக ஏற்படுத்த பட்ட சிறப்பு அமைப்பின் தலைமை அதிகாரியாகவும் இரட்டை வேடங்களில் வாழ்ந்து இருக்கிறார்.
அமலாபால் இந்த படத்தில் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க உதவும் அஞ்சலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கஞ்சாகருப்பு ஆட்டோ ஓட்டுனராக வந்து காமெடியில் கலக்கி இருக்கிறார்.
படத்தின் படிப்பிடிப்பு பெங்களூர் மற்றும் கோவாவிலும் நடைபெற்று முடிந்தன விரைவில் படம் வெளியாக உள்ளதாக தெரிவித்தார்.

Back To Top
CLOSE
CLOSE