Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

‘பலூன்’ திரைப்படத்திற்காக யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் பாடலை பாடியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.

‘பலூன்’ திரைப்படத்திற்காக யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் பாடலை பாடியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்

ஒரே இரவில் பிரபலம் அடைவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதுவும் திரையுலகில் பிரபலம் அடைய வேண்டுமென்றால் அதற்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை…அத்தகைய சிறப்பான குணங்களால் தமிழக ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று இருப்பவர் பாடலாசிரியர் – பாடகர் அருண்ராஜா காமராஜ்…. தற்போது இவர் இளைஞர்களை தன்னுடைய துள்ளலான இசையால் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி வரும் பலூன் திரைப்படத்தின் பாடலை பாடியிருக்கிறார். ஜெய் – அஞ்சலி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் ‘பலூன்’ திரைப்படத்தை ’70 எம் எம்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சினிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் பலூன் திரைப்படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக பணிபுரிவது பலூன் படத்திற்கு கூடுதல் பலம்.

“யுவன் சாரின் மிக பெரிய ரசிகன் நான்….அவருடைய இசையில் நான் பாடுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது…. இந்த பாடலுக்காக என்னை தேர்ந்தெடுத்த யுவன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்..” என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் அருண்ராஜா காமராஜ். ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் பெற்றுவரும் இந்த சிறப்பான கூட்டணியானது, விரைவில் இசை பிரியர்களை கவர உள்ளது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

Back To Top
CLOSE
CLOSE