Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

நான் கள்ளனும் இல்லை… காதலனும் இல்லை! நடிகர் சௌந்தரராஜா..

நான் கள்ளனும் இல்லை… காதலனும் இல்லை!
நடிகர் சௌந்தரராஜா திடீர் பரபர!

“தர்மதுரை” படத்தில் விஜயசேதுபதியின் தம்பியாகவும், “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” படத்தில், யங் டிராபிக் ராமசாமியாகவும்… அனைவராலும்பாராட்டப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார், நடிகர் சௌந்தரராஜா.

“கத்திச்சண்டை” படத்தில் விஷாலின் நண்பனாகவும், “கள்ளன்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், “ஒரு கனவு போல” படத்தில் கதைநாயகர்களில்ஒருவராகவும் நடித்துள்ளார் சௌந்தரராஜா. அடுத்தடுத்து படங்கள் வெளியாவது ஒரு பக்கம் இருக்க, ஹீரோவாக நடிக்க கதைகள் வந்துகொண்டிருப்பதில் மிகஉற்சாகமாக இருக்கிறார். ஆனால், ஒரு கனவு போல படத்திலும் மற்றும் “கள்ளன்” படத்திலும் சௌந்தரராஜாவின் கேரக்டர் பற்றி கசிந்துள்ள தகவல்கள் அவரைபரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.

அது பற்றி சௌந்தரராஜாவிடம் கேட்டபோது, “ஒரு கனவு போல” படத்தில் நடித்தது நிஜமாகவே மகிழ்ச்சியான விஷயம். ஸ்ரீதர் சார், பாலசந்தர் சார், பாரதிராஜாசார், பாக்கியராஜ் சார்… படங்கள் போல கதாபாத்திரங்களை உளவியல் ரீதியாக சித்தரிக்கும் படங்கள் இப்போது வருவதே இல்லை. “ஒரு கனவு போல” அப்படிஒரு படமாக இருக்கும். கதாபாத்திரங்களுக்குள் ஏற்படுகிற உளவியல் பிரச்சினைகளை அழகாக சொல்லி இருக்கிறார் ’ஒரு கனவு போல’ படத்தின் இயக்குநர்விஜயசங்கர் சார். “ஒரு கனவு போல” படத்தில் என் கேரக்டர், கள்ளனா? காதலனா? என்பதைப்பற்றி இப்போதைக்கு நான் வெளியே சொல்லமுடியாது. படம்பார்த்துவிட்டு நீங்கள் சொல்லுங்கள்.

இயக்குநர்களில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது என்பதை இயக்குனர் சந்திரா அக்காவின் “கள்ளன்” படம் நிருபிக்கும். “கள்ளன்” படத்தில்,நடித்தது நிஜமாகவே பெருமையான விசயம்.
.
“ஒரு கனவு போல”, “கள்ளன்” இரண்டு படங்களுமே மிகவும் பேசப்படுகிற படங்களாக இருக்கும். இந்த இரண்டு படங்களிலும் என் கதாபாத்திரங்களும் பேசப்படும்.ஹீரோவாக நடிக்க கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் நடிகன். என்னை நம்பி, என்னை ஹீரோவாக, வில்லனாக எப்படி நடிக்கஅழைத்தாலும் அந்த கதாபாத்திரங்கள் எனக்கு பிடித்திருந்தால் உடனடியாக சம்மதிப்பேன்.​​​​​​​​

Back To Top
CLOSE
CLOSE