Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றது..

பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றது

பணத்தின் மீது மக்கள் எந்த அளவிற்கு அளவில்லாத ஆசை வைத்திருக்கிறார்கள் என்பதை அனைவருக்கும் உணர்த்திய திரைப்படம், நடிகர் மனோபாலாவின் தயாரிப்பில் உருவான ‘சதுரங்க வேட்டை’. இத்தகைய வலுவான கதையம்சம் நிறைந்திருக்கும் படங்களை தேர்வு செய்து, தயாரிப்பு துறையில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்து இருக்கிறார் மனோபாலா. தரமான தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் உருவெடுத்து வரும் மனோபாலா, தற்போது அவருடைய அடுத்த தயாரிப்பான ‘பாம்பு சட்டை’ திரைப்படம் மூலம், தன்னுடைய வெற்றி பயணத்தை தொடர இருக்கிறார். பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பாம்பு சட்டை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, மிகுந்த உற்சாகத்தோடு நிறைவு பெற்றது. தற்போது தொழில் நுட்ப ரீதியாக படத்தை மேலும் மெருகேற்றும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ‘பாம்பு சட்டை’ படத்தின் விநியோக உரிமையை வாங்கி இருக்கும் ‘சினிமா சிட்டி’ கே கங்காதரனோடு இணைந்து, அபி & அபி நிறுவனத்தின் நிறுவனர் திரு அபினேஷ் இளங்கோவன் இந்த படத்தை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Back To Top
CLOSE
CLOSE