Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

சென்னை 28 – II’ படக்குழுவினர் சேவாகின் பிறந்த நாளன்று படப்பிடிப்பை நிறைவு செய்தனர்..

சேவாகின் பிறந்த நாளன்று படப்பிடிப்பை நிறைவு செய்தனர் ‘சென்னை 28 – II’ படக்குழுவினர்

தமிழக ரசிகர்கள் மத்தியில் தற்போது கிரிக்கெட் ஜுரம் வேகமாக பரவி கொண்டு வருகிறது….அதற்கு காரணம் சர்வேதச கிரிக்கெட் போட்டி கிடையாது, மாறாக சென்னை 28 அணியினர் விளையாட இருக்கும் ‘கல்லி கிரிக்கெட்டின்’ இரண்டாம் ஆட்டம் தான். ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ சார்பில் வெங்கட் பிரபு தயாரித்து இயக்கி இருக்கும் சென்னை 28 இரண்டாம் பாகத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் தலைமையில் கோலாகலமாக மலேஷியாவில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது தங்களின் படப்பிடிப்பை மிகுந்த உற்சாகத்துடனும், ஆற்றலுடனும் ‘சென்னை 28 – II’ படக்குழுவினர் நிறைவு செய்திருக்கின்றனர்…பிரபல கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாகின் பிறந்த நாளான அக்டோபர் 20 ஆம் தேதி அன்று அவர்கள் தங்களின் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது மேலும் சிறப்பு.

“பொதுவாகவே இரண்டு நாட்களுக்கு அதிகமாக நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், வீரர்கள் அனைவரும் பொறுமையாக தான் ஆட்டத்தை ஆடுவார்கள்…. ஆனால் அந்த ஆட்டத்திலும் முதல் பந்தை சிக்ஸருக்கு அடிக்க கூடிய ஒரு வீரர் விரேந்தர் சேவாக்…அவருடைய பிறந்த நாளான அக்டோபர் 20 ஆம் தேதி எங்கள் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்வதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்…எப்படி அவருடைய சிக்ஸர் ரசிகர்களை உற்சாகப்படுத்துமோ, அதேபோல் எங்களின் ‘சென்னை 28 – II’ ஆம் பாகமும் தமிழ் ரசிகர்களை ‘நட்பு’ என்னும் சிக்ஸர் வாயிலாக உற்சாகத்தின் விளிம்பிற்கே எடுத்துச் செல்லும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Back To Top
CLOSE
CLOSE