Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

‘போகன்’ இமான் இசையமைத்து, அனிரூத் பாடியிருக்கும் ‘டமாலு டுமீலு’ பாடல். நவம்பர் 29 ஆம் தேதி .

‘போகன்’ படத்தின் முதல் பாடல், எம் ஜி ஆர் முதல் நம்பியார் வரை தமிழ் திரையுலகில் உள்ள எல்லா கதாநாயகர்களுக்கும், வில்லன்களுக்கும் ஓர் சமர்ப்பணம்.

இரண்டு தலைச் சிறந்த இசையமைப்பாளர்கள் ஒரு பாடலுக்கு ஒன்றிணைந்தால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அளவே இருக்காது….அப்படி ஒரு பாடலாக உருவாகி இருப்பது தான் ‘போகன்’ திரைப்படத்திற்காக டி இமான் இசையமைத்து, அனிரூத் பாடியிருக்கும் ‘டமாலு டுமீலு’ பாடல்….வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த பாடலின் முன்னோட்ட காணொளியை, சமீபத்தில் பிரபுதேவா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்….29 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து கொண்டே போய் கொண்டிருக்கிறது. ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ் இணைந்து தயாரித்து, ‘ரோமியோ ஜூலியட்’ புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கும் ‘போகன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி – ஹன்சிகா மோத்வானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“என்னுடைய முதல் படமான ரோமியோ ஜூலியட் படத்தில் அனிரூத் – இமான் கூட்டணியில் உருவான ‘டண்டணக்கா’ பாடல், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது…. அந்த வெற்றி கூட்டணி தற்போது எங்களின் போகன் படத்தில் மீண்டும் கைக்கோர்த்து இருப்பது, எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது…நிச்சயமாக எங்களுடைய ‘டமாலு டுமீலு’ பாடல் ரசிகர்களுக்கு ஒரு கிறிஸ்துமஸ் விருந்தாக இருக்கும் என பெரிதும் நம்புகிறோம்…” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் லக்ஷ்மன்.

Back To Top
CLOSE
CLOSE