Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

விஜய் சேதுபதி – காயத்திரி நடித்திருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படம். தமிழில் ‘புரியாத புதிர்’ – தெலுங்கில் ‘பீட்சா – 2’

தமிழில் ‘புரியாத புதிர்’ – தெலுங்கில் ‘பீட்சா – 2’

அதிகம் படித்த மக்கள் முதல் சராசரியான பாமர மக்கள் வரை எல்லோர் மனதிலும் எளிதாக நுழைய கூடிய ஒன்று, சினிமா. அதற்கு எந்தவித மொழியும் தேவை இல்லை என்பதை தற்போது ஆழமாக உணர்த்தி இருக்கிறது, விஜய் சேதுபதி – காயத்திரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படம். தெலுங்கில் ‘பீட்சா – 2’ என்று தலைப்பிடப்பட்டு வெளியாக இருக்கும் இந்த திரைப்படம், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது…..கடந்த நவம்பர் 27 ஆம் தேதி, ஹைதெராபாத்தில் விமர்சையாக நடைபெற்ற இந்த படத்தின் இசை விழாவே அதற்கு சிறந்த உதாரணம். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில், தம்மா ரெட்டி பரத்வாஸ், பெல்லம்கொண்ட சுரேஷ், எஸ் வி ஆர் மீடியா – சோபராணி, இசையமைப்பாளர் மந்த்ரா ஆனந்த் மற்றும் மல்காப்புறம் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டது மேலும் சிறப்பு. ‘பீட்சா – 2’ (புரியாத புதிர்)படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை டி வி சினி கிரியேஷன்ஸ் சார்பில் டி வெங்கடேஷ் வாங்கி இருக்க, ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் ஜே சதீஷ் குமார், மாருதி மற்றும் சுதர்சன் ரெட்டி ஆகியோர் இணைந்து இந்த படத்தை வெளியிடுகின்றனர். ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் ஜே சதீஷ் குமார் ‘பீட்சா – 2’ படத்தின் இசை தட்டை வெளியிட, அதை பெல்லம்கொண்ட சுரேஷ் பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.

“நல்ல கதை களங்கள் கொண்ட திரைப்படங்கள் அனைத்தும் வர்த்தக உலகில் வெற்றியை தான் தழுவி இருக்கின்றது….அப்படி ஒரு திரைப்படமாக எங்களின் ‘பீட்சா – 2’ இருக்கும். வலுவான கதையம்சம் நிறைந்த தமிழ் திரைப்படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது…. அவர்களின் ரசனைகளையும், எதிர்பார்புகளையும் முழுவதுமாக ‘பீட்சா – 2’ திரைப்படம் பூர்த்தி செய்யும்…..” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் டி வி சினி கிரியேஷன்ஸ் டி வெங்கடேஷ்.⁠⁠⁠⁠

Back To Top
CLOSE
CLOSE