Flash Story
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் “கேங்கர்ஸ்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி !!
45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா
பெண் இயக்குனர் ஜெயலட்சுமி இயக்கியிருக்கும் ” என் காதலே “முக்கோண காதல் கதை.
தயாரிப்பாளர் அன்புசெழியன் வெளியிட்ட ‘வருணன்- காட் ஆஃப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்டம்
“ARENA” – TEST திரைப்படத்தின் முதல் பாடல் – இப்போது வெளியானது
100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!!
BV Frames தயாரிப்பில் பாபு விஜய் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!
விண்ணைத்தாண்டி வருவாயா – 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் !!

தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ‘பேஸ்புக்கோடு’ கைக்கோர்க்கிறது ‘சென்னை 28 – II’

தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ‘பேஸ்புக்கோடு’ கைக்கோர்க்கிறது ‘சென்னை 28 – II’

இதுவரை நேரலை நிகழ்ச்சிகள் பலவற்றை ரசிகர்கள் தொலைக்காட்சிகளில் கண்டிருப்பார்கள்….ஆனால் தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ‘பேஸ்புக்’ நேரலை நிகழ்ச்சியை அறிமுக படுத்த இருக்கின்றனர் ‘சென்னை 28 – II’ அணியினர். ‘சென்னை 28 – I’I படத்தின் அதிகாரபூர்வமான பேஸ்புக் பக்கத்தில், டிசம்பர் 1 ஆம் தேதி மாலை 4 மணிக்கு இந்த நேரலை நிகழ்ச்சி, பேஸ்புக் நிறுவனத்தின் முக்கிய தலைமை இடமான ஹைதெராபாத்தில் இருந்து ஒளிபரப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ‘ட்ரெண்ட் லௌட்’ நிறுவனத்தோடு இணைந்து, சென்னை 28 – II அணியினர் பேஸ்புக்கில் நடத்தி வரும் ‘புரோப்பைல் பிரேம்’ நிகழ்ச்சி சமூவலைத்தள வாசிகளின் பாராட்டுகளை பெற்று வர, தற்போது நடைபெற இருக்கும் இந்த நேரலை நிகழ்ச்சியும் அவர்களின் எதிர்பார்ப்பை பெரிய அளவில் பெற்று வருகிறது.

“இது போன்ற புது விதமான சமூகவலைத்தள விளம்பரங்களை தென்னிந்திய திரையுலகிற்கு அறிமுகப்படுத்துவதில், எங்கள் சென்னை 28 – II அணியினருக்கு பெருமையாக இருக்கின்றது. இந்த நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரசிகர்களுக்கு பேஸ்புக்கில் ஒரு போட்டியும் நடத்தப்பட்டது….அந்த போட்டியில் வெற்றி பெற்று, குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 ரசிகர்கள் (கிரிக்கெட் ஆட்டத்தில் இருக்கும் 11 விளையாட்டு வீரர்கள் போல்), இந்த நேரலை நிகழ்ச்சியில் எங்களுடன் கலந்து கொள்ள இருக்கின்றனர்…..டிசம்பர் 1 ஆம் தேதி மாலை நான்கு மணி முதல் எங்களின் ஆட்டம் தொடர இருக்கிறது…..முற்றிலும் வித்தியாசமான இந்த யோசனையை எங்களுக்கு வழங்கிய ட்ரெண்ட் லௌட் நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்….” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.⁠⁠⁠⁠

Link – m.facebook.com/chennai28II/

Back To Top
CLOSE
CLOSE