Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

“நயன்தாராவுடன்’ கை கோர்க்கும் ஈரோஸ் நிறுவனம்..!

சர்வேதச அளவில் தயாரிப்பு மற்றும் விநியோக துறையில் கொடி கட்டி பறக்கும் ‘ஈரோஸ் சவுத்’ நிறுவனம், தற்போது நயன்தாரா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கிறது….இதன் மூலம் தென் இந்திய திரையுலகில் இன்னும் ஆழமாக கால் பதித்து இருக்கிறது ‘ஈரோஸ் சவுத்’.

“நயன்தாரா உடன் இணைந்து பணியாற்றும் இந்த திரைப்படத்தை பற்றி அறிவிப்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தின் கதையை அறிமுக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி நயன்தாராவிடம் கூறிய அடுத்த கனமே, இதில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்து விட்டார். கதை களங்களையும், கதாபாத்திரங்களையும் மிக கவனமாக ஆராய்ந்து, அதன் பின் தேர்ந்தெடுப்பவர் நயன்தாரா என்பது ஒட்டுமொத்த திரையுலகிற்கும் நன்றாக தெரியும். நயன்தாராவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எங்கள் ஈரோஸ் நிறுவனத்தின் எண்ணம். அந்த வகையில் அவர் நடிக்கும் படத்தை தயாரிப்பது, எங்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. பிரமிக்க வைக்கும் ஒரு திரைப்படத்தை உருவாக்க நாங்கள் அனைவரும் தற்போது இணைந்து பணியாற்ற இருக்கிறோம். இந்த படத்தில் நடன இயக்குநராக செழியன் பணியாற்றுகிறார். மற்ற நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை பற்றிய விவரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும். வருகின்ற மார்ச் மாதத்தில் இருந்து எங்களின் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம்.” என்று கூறுகிறார் ‘ஈரோஸ் சவுத்’ நிறுவனத்தின் தலைவர் சாகர் சத்வானி.

Back To Top
CLOSE
CLOSE