Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

“தப்பு தண்டா” எனக்கு சரியான துவக்கத்தை கொடுத்து இருக்கின்றது. இசையமைப்பாளர் நரேன் பாலகுமார்..

‘தப்பு தண்டா’ எனக்கு சரியான துவக்கத்தை கொடுத்து இருக்கின்றது…” என்கிறார் இசையமைப்பாளர் நரேன் பாலகுமார்

விரைவில் வெளியாக இருக்கும் ‘தப்பு தண்டா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் இசையமைப்பாளர் நரேன் பாலகுமாருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு கிடைத்திருக்கிறது. ‘தப்பு தண்டா’ திரைப்படத்திற்காக இவர் இசை அமைத்த ‘டூப்ளிக்கா டோமாரி’ பாடல் யூ டூபில் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் இசையமைத்த ‘சென்னை சூப்பர் கிங்ஸ் கீதம்’, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு சமர்ப்பணம் செய்யும் விதத்தில் இவர் இசையமைத்த ‘தலைவனுக்கு ஒரு பாட்டு’ ஆகிய பாடல்களை தவிர்த்து, இவர் பின்னணி இசையமைத்த ‘ரே’, ‘மோரிபந்’, ‘ஊமை’ போன்ற குறும்படங்களும் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சிகரம் பாலுமகேந்திராவின் சீடரான ஸ்ரீகண்டன் இயக்குநராக அறிமுகமாகும் இந்த ‘தப்பு தண்டா’ படத்தை, ‘கிளாப்போர்டு புரொடக்ஷன்’ சார்பில் தயாரித்து இருக்கிறார் சத்யமூர்த்தி.

“டூப்ளிகா டோமாரி பாடல் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து இருப்பதற்கு முழு காரணம் ரசிகர்கள் தான். முதலில் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். எங்களின் ‘தப்பு தண்டா’ படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் இருக்கின்றது. இவை அனைத்திற்கும் வயோலின், கிட்டார், புல்லாங்குழல் என பெரும்பாலும் லைவ் இசை கருவிகளையே பயன்படுத்தி இருக்கின்றோம். அதுமட்டுமின்றி, பாடகர்கள் சின்மயி, அபே, அல்போனேஸ் ஜோசப், ஹரிஹர சுதன், ஹைடி கார்ட்டி மற்றும் கானா வினோத் ஆகியோரின் குரல், ‘தப்பு தண்டா’ பாடல்களுக்கு உயிர் கொடுத்து இருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லுவேன். மும்பை நகரில் உள்ள ‘நியூ எட்ஜ் ஸ்டுடியோவில்’, பிரபல சவுண்ட் என்ஜினீயர் ஷதாப் ரவீன் தலைமையில் இந்த பாடல்கள் அனைத்தும் ரெகார்ட் செய்ய பட்டிருக்கிறது. தற்போது ஆடியோ என்ஜினீயர் தபாஸ் நாயக்கின் மேற்பார்வையில், பின்னணி இசையை டிஜிட்டல் முறையில் மெருகேற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. மிக விரைவில் வெளியாகும் எங்களின் ‘தப்பு தண்டா’ படத்தின் பாடல்கள், ரசிகர்களின் உள்ளங்களை சரியான விதத்தில் கவரும்.” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இசையமைப்பாளர் நரேன் பாலகுமார்.

Back To Top
CLOSE
CLOSE