Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

துருவங்கள் 16 படத்தை தொடர்ந்து ரகுமான் நடிப்பில் உருவாகி வரும் ‘பகடி ஆட்டம்”

துருவங்கள் 16 படத்தை தொடர்ந்து ரகுமான் நடிப்பில் உருவாகி வரும் ‘பகடி ஆட்டம்’

ரகுமான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘துருவங்கள் 16’. இப்படத்தில் ரகுமான் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இதில் ரகுமானின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக பத்திரிகையாளர்களும், ஊடகங்களும், இணையத்தளங்களும் ரகுமானின் நடிப்பை பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
இப்படத்தை தொடர்ந்து ரகுமான் நடிப்பில் ‘பகடி ஆட்டம்’ படம் உருவாகி வருகிறது. இதில் ரகுமான் துப்பறியும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போதுள்ள சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் மக்கள் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை துப்பறிந்து வெளிச்சத்துக் கொண்டுவரும் கதாபாத்திரத்தில் ரகுமான் நடிக்கிறார்.

பெண்களுக்கு விழிப்புணர்வு கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ராம் கே.சந்திரன் இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்து வருகிறார். Marram Movies மற்றும் Bharani Movie பெருமையுடன் வழங்கும் ‘பகடி ஆட்டம்’ படத்தை குமார் டி.எஸ், கே.ராமராஜ், டி.சுபாஷ் சந்திரபோஸ், ஏ.குணசேகர் ஆகியோர் தயாரித்து வருகிறார்கள்.
V.T நிறுவனம் இப்படத்தை உலகமெங்கும் வெளியிட இருக்கிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 7 மணியளவில் இயக்குனர் பாண்டிராஜ் வெளியிடுகிறார்.

Back To Top
CLOSE
CLOSE