Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

அருண் விஜய் நடித்திருக்கும் ‘குற்றம் 23’ திரைப்படம் வருகின்ற மார்ச் 2 ஆம் தேதி அன்று வெளியாகின்றது.

அருண் விஜய் நடித்திருக்கும் ‘குற்றம் 23’ திரைப்படம் வருகின்ற மார்ச் 2 ஆம் தேதி அன்று வெளியாகின்றது

அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் – மகிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் – ‘குற்றம் 23’. மெடிக்கல் – கிரைம் – திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் ‘குற்றம் 23’ திரைப்படம் வருகின்ற மார்ச் 2 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கின்றது. ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து இருக்கும் ‘குற்றம் 23’ படத்தில் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் கே எம் பாஸ்கரன், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் விவேகா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் என வலுவான தொழில் நுட்ப கலைஞர்கள் பலர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.

“என்னை ஒரு தயாரிப்பாளராக முதல் முதலில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் ‘குற்றம் 23’ திரைப்படத்தை, வருகின்ற மார்ச் 2 ஆம் தேதி அன்று வெளியிடுவதில் அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. தரமான கதையம்சத்தோடு, வர்த்தக வெற்றிக்கு தேவையான சிறப்பம்சங்களையும் உள்ளடக்கி ஒரு திரைப்படத்தை உருவாக்குவது தான் பெரும்பாலான தயாரிப்பாளர்களின் முக்கிய குறிக்கோளாக இருக்கும். அந்த வகையில் என்னுடைய முதல் படத்திலேயே இத்தகைய சிறப்பம்சங்களை பெற்று இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இதற்கு உறு துணையாய் இருந்து வரும் என்னுடைய நண்பர் அருண் விஜய்க்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். தயாரிப்பு துறையில் கால் பதிக்கும் எங்களின் ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்திற்கு சிறந்த ஒரு அடித்தளமாக இந்த ‘குற்றம் 23’ திரைப்படம் இருக்கும்” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் குற்றம் 23 படத்தின் தயாரிப்பாளர் இந்தெர் குமார்.

Back To Top
CLOSE
CLOSE