Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

19 டேக் வாங்கி, “ரங்குஸ்கிக்கு” முத்தமிட்டார் “ராஜா”

19 டேக் வாங்கி, ‘ரங்குஸ்கிக்கு’ முத்தமிட்டார் ‘ராஜா’

‘பர்மா’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ புகழ் தரணிதரன் இயக்கத்தில், ‘மெட்ரோ’ படப்புகழ் ஷிரிஷ் மற்றும் ‘வில் அம்பு’ புகழ் சந்தினி தமிழரசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படம் ‘ராஜா ரங்குஸ்கி’. சக்தி வாசன் மற்றும் ‘பர்மா டாக்கீஸ்’ இணைந்து தயாரித்து வரும் இந்த ”ராஜா ரங்குஸ்கி’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. கிரைம் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி 6 ஆம் தேதி, தரமணியில் பிரம்மாண்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது.

“திட்டமிட்டதை விட எங்களின் படப்பிடிப்பு துரித வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 சதவீத படப்பிடிப்பை நாங்கள் முடித்து இருக்கின்றோம், மேலும் எங்களின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் இதே வேகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றோம். கதாநாயகன் ஷிரிஷ் தன்னுடைய கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்து வருகிறார், ஆனால் காதல் காட்சிகளில் மட்டும் அவருக்கு கொஞ்சம் பதட்டம் ஏற்பட்டுவிடுகிறது. கதாநாயகிக்கு முத்தமிடும் காட்சியில் ஏறக்குறைய 19 டேக் வாங்கி இருக்கிறார். அநேகமாக அவர் வேண்டுமென்றே தான் அவ்வாறு செய்திருப்பார் என்று தோன்றுகிறது” என்று நகைச்சுவையாக கூறுகிறார் இயக்குநர் தரணிதரன்.

Back To Top
CLOSE
CLOSE