Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

நடிகர் சரண்ராஜின் மகன் தேஜ் சரண்ராஜ் நடிக்கும் லாலி லாலி ஆராரோ

ஆறுபடை மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் ‘லாலி லாலி ஆராரோ.’

இந்த படத்தில் பிரபல நடிகர் சரண்ராஜ் மகன் தேஜ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக ஷிவானி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் மனோபாலா, லஷ்மி பிரியா மேனன், ஷினாஜ், ஜீவாரவி, விஜய் டிவி புகழ் திவாகர் ஆகியோரும் நடிக்கிறார்கள் கிருஷ்ணகுமார் வில்லனாக நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – நாகபூஷன், இசை – ராமகோபால கிருஷ்ணன், பாடல்கள் – ராஜகனி, படத் தொகுப்பு – ஆனந்த்.ஆர்.ஜி, நடனம் – ராபர்ட் சுரேஷ், சண்டை பயிற்சி – ஓம்பிரகாஷ், கலை இயக்கம் – மகிரங்கி, தயாரிப்பு மேற்பார்வை – ஷியாம் சரஸ், இணை தயாரிப்பு – மஞ்சுநாத். MRL ,ரவிகுமார், S.V.K.பிரதர்ஸ், C.தேவேந்திர ராஜா, தயாரிப்பு – ஆறு படையப்பன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – லிங்கன் ராஜாளி.

படம் பற்றி இயக்குநர் லிங்கன் ராஜாளி பேசும்போது, “அம்மாதான் உலகம் என்று வாழும் நாயகன் லாலி. அதேபோல் தன் மகனைவிட உலகத்தில் சிறந்தது எதுவும் இல்லை என்ற நினைப்பில் உள்ள அம்மா. இவர்களுக்கு இடையில் காதலியாக, மதுரா உள்ளே வர அதை அந்த குடும்பம் எப்படி எதிர் கொள்கிறது என்பது ஒரு டிராக்.

மறுபுறம் தன் மகள்தான் தனது ஆதாரம் என்று வாழும் ஒரு தகப்பன். தகப்பனை தவிர உலகத்தில் உயர்ந்தது இல்லை என்று வாழும் மகள். இவர்களுக்கு இடையே காதலனாக லாலி உள்ளே வர, அதை எப்படி ஹீரோயினின் குடும்பம் எதிர்கொள்கிறது என்பதும்தான் இந்த படத்தின் கதை..!

செண்டிமெண்ட் கலந்து குடும்பத்துடன் பார்க்கும் படமாக உருவாக்கி உள்ளோம். படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில், மற்றும் கேரளா பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று நடைபெற உள்ளது..” என்றார்.

Back To Top
CLOSE
CLOSE