Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

தமிழ் திரையுலக நட்சத்திரங்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது 8 தோட்டாக்கள்’ திரைப்படம்


8 தோட்டாக்கள் படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் தமிழ் திரையுலக நட்சத்திரங்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைத்து நட்சத்திரங்களும், 8 தோட்டாக்கள் படத்தின் தரமான கதையையையும், அசத்தலான நடிப்பையும், திறமையான தொழில் நுட்ப வேலைகளையும் பாராட்டி வருகின்றனர். ‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் மற்றும் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ – ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும் ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தை, இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் புதுமுகம் வெற்றி – அபர்ணா பாலமுரளி – எம் எஸ் பாஸ்கர் – நாசர் ஆகியோர் முன்னணி கதாபாத்திங்களில் நடித்துள்ளனர். ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருக்கும் ‘8 தோட்டாக்கள்’ படத்தை, வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று ‘சக்திவேல் பிலிம் பேக்டரி’ சார்பில் வெளியிடுகிறார் சக்திவேல்.

“எம் எஸ் பாஸ்கர் சாரின் தலை சிறந்த நடிப்பை, மனித உணர்வுகளால் நிறைந்து இருக்கும் இந்த 8 தோட்டாக்கள் படத்தில் காணலாம். வயதான பிறகு நம் பெற்றோர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி இருக்கின்றது 8 தோட்டாக்கள். நிச்சயமாக இந்த படத்தை குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டும்” என்று கூறுகிறார் துருவங்கள் 16 படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன்.

“இயக்குனர் ஸ்ரீ கணேஷின் ஓர் உன்னதமான படைப்பு தான் இந்த 8 தோட்டாக்கள். இந்த படத்தில் நடித்து இருக்கும் எல்லா நடிகர்களின் நடிப்பும், ஒளிப்பதிவு மற்றும் இசையும் என்னை பெரிதளவில் கவர்ந்துவிட்டது. நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படமாக 8 தோட்டாக்கள் இருக்கும்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு

“அனைவரையும் கவர கூடிய விதத்தில் இந்த 8 தோட்டாக்கள் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் திரையுலகிற்கு உத்வேகம் அளிக்க கூடிய ஒரு படமாக இந்த திரைப்படம் இருக்கும்” என்று கூறுகிறார் இயக்குநர் சசி.

“நான் என் வாழ் நாளில் பார்த்த மிக சிறந்த படங்களுள் ஒன்று – 8 தோட்டாக்கள். இது முழுக்க முழுக்க இயக்குநர் ஸ்ரீ கணேஷன் 100 சதவீத உழைப்பாலும், அர்பணிப்பாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் ஓர் தனித்துவமான அடையாளத்தை இந்த படம் பதிக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா.

Back To Top
CLOSE
CLOSE