Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘வேட்டை நாய்’ திரைப்படம்

விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்திற்குப் பின் ஒரு நடிகராக அழுத்தமான அடையாளம் பெற்றார். அதன் பிறகு தொடர்ச்சியான பட வாய்ப்புகள் வரவே பல்வேறு கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஒரு வில்லனாக அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ், இப்போது தனி நாயகனாக ‘தனி முகம்’, ‘பில்லா பாண்டி’ போன்ற படங்களிலும் வேறு நாயகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

ஓய்வில்லாமல் நடித்து வரும் அவரிடம் ஓர் இயக்குநர் கதை சொல்ல முன் வந்தபோது தேதிகள் இல்லை என்று ஆரம்பத்தில் தவிர்த்திருக்கிறார். கதையைக் கேளுங்கள் என்று இயக்குநர் கேட்டபோது அரை மனதுடன் கேட்க உட்கார்ந்தவர், கதையைக் கேட்டு முடித்தவுடன் எப்போது படப்பிடிப்புக்குப் போகலாம் என்றிருக்கிறார்.

அது மட்டுமல்ல இந்த புதிய படத்திற்காக தனது தேதிகளைச் சரி செய்து கொடுத்துள்ளார். விரைவில் படம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்தப் படம்தான் ‘வேட்டை நாய்’.

அப்படிக் கதை சொல்லி ஆர்.கே.சுரேஷைக் கவர்ந்திருப்பவர் இயக்குநர் எஸ்.ஜெய்சங்கர். இவர் ஏற்கெனவே அப்புக்குட்டியை நாயகனாக்கி இயக்கிய ‘மன்னாரு’ படத்தை இயக்கி பாலுமகேந்திரா போன்ற படைப்பாளிகளால் பாராட்டை பெற்றவர். இந்த ‘வேட்டை நாய்’ திரைப்படம் இவருக்கு இரண்டாவது படமாகும்.

இந்தப் படத்தில் நாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்க, நாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார். ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமையா, சரவண சக்தி, ‘என் உயிர்த் தோழன்’ ரமா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை தாய் மூவீஸ் தயாரிக்கிறது.

படம் பற்றி இயக்குநர் எஸ். ஜெய்சங்கர் பேசும்போது, “படத்தின் நாயகன் முரடன் என்றால் அப்படி ஒரு முரடன். ஆனால் அடிப்படையில் நல்லவன். இவ்வளவு நல்லவனா என்று அவனுக்குத் தெரியாது. அப்படிப்பட்டவனை உலகையே அறியாத குழந்தைத்தனம் கொண்ட பெண் அவனை யார் என்று உணர வைக்கிறாள். இப்படிப்பட்ட இரு துருவ குணச்சித்திரங்களும் எப்படி இணைய முடியும்…? அவர்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள் என்பதே கதை.

இந்த நாயகன் பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் சாரைத் தவிர யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அப்படியே அவரிடம் கதை சொன்னேன். பிடித்துவிட்டது. இதோ அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம்…” என்கிறார்.

கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

Back To Top
CLOSE
CLOSE