Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

குழந்தைகளுக்கான கலகலப்பான படம் ‘வானரப் படை’

ஸ்ரீருக்மணி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘வானரப் படை.’

இந்த படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குநர், மற்றும் கதாசிரியருமான அண்ணாதுரை கண்ணதாசனின் மகன் முத்தையா கண்ணதாசன் நாயகனாக அறிமுகமாகிறார்.

கதையின் நாயகியாக விளம்பரப் பட உலகில் பிரலமான சிறுமியான அவந்திகா அறிமுகமாகிறார். இவர் பிரபல நடிகைகள் நடித்த பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். நடிகை ஜோதிகா நடித்த பல விளம்பரப் படங்களில் அவந்திகாவும் உடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடன் அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் என்கிற ஆறு சிறுவர், சிறுமியர்கள் வானரப் படைகளாக நடிக்கிறார்கள். 9 வயதிலிருந்து 11 வயதுவரை உள்ள சிறுவர், சிறுமிகளின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாவுக்காக இந்த சிறுவர் சிறுமிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்றும் பஞ்சு சுப்பு, நமோ நாராயணன், ஜீவா ரவி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – லோகி. இவர் இயக்குநர் கே.ஆர். இயக்கிய பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை – A.சண்முகம், தயாரிப்பு – ஸ்ரீருக்மணி பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் – M.ஜெயப்பிரகாஷ்.

இயக்குநர் ஜெயப்பிரகாஷ் இயக்குநர் கே.ஆர். இயக்கிய பல படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்ததுடன் ‘நேர் எதிர்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குநர் M.ஜெயப்பிரகாஷ் பேசியபோது, “ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களை மையமாகக் கொண்டு பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் மன போராட்டங்களை சொல்லும் திரைப்படமாக உருவாகவுள்ளது இந்த ‘வானரப் படை’.

பெற்றோர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் சின்ன இடைவெளிதான் மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்திவிடுகிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி ஒரே கட்டத்தில் படப்பிடிப்பு நடைபெறுகிறது…” என்றார்.

Back To Top
CLOSE
CLOSE