ஸ்ரீஅங்காளம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக புதுவை G.கோபால்சாமி தயாரித்துள்ள படம் ‘மங்களாபுரம்.’
இந்த படத்தில் யாகவன், சிவகுரு இருவரும் நாயகர்களாக நடித்துள்ளனர். காயத்ரி, கமலி இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் அஜெய் ரத்னம், டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டா மணி, சந்தோஷ், வேலுசாமி, பேபி தர்ஷினி, பேபி மகதி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – திருஞானசம்மந்தம், இசை – கார்த்திகேயன் மூர்த்தி, பாடல்கள் – கோ.சேஷா, கலை – சின்னா, நடனம்- எஸ்.எல்.பாலாஜி, ராம்முருகேஷ், படத் தொகுப்பு – ராஜ்கீர்த்தி, தயாரிப்பு மேற்பார்வை – கோவை ஷுசேன், வசனம்- சிவா, கதை – ஸ்ரீஅங்காளம்மன் மூவீஸ், திரைக்கதை, இயக்கம் – R.கோபால், இணை தயாரிப்பு – சித்ராதேவி செழியன், தயாரிப்பு – புதுவை.G.கோபாலன்சாமி.
படம் பற்றி இயக்குநர் ஆர்.கோபால் பேசும்போது, “மது என்கிற அரக்கன் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறான் என்பதுதான் படத்தின் மையக் கரு.
புதிதாக திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான ஜமீன் பங்களாவில் குடியேறுகிறார்கள். அந்த பங்களாவுக்குள் அவர்களை ஒன்று சேர விடாமல் அமானுஷ்ய சக்தி ஒன்று தடுக்கிறது.
அந்த அமானுஷ்ய சக்தி யார்..? இளம் காதலர்கள் வென்றார்களா.. அமானுஷ்ய சக்தி வென்றதா என்கிற பரபரப்பான திரைக்கதைதான் இந்த ‘மங்களாபுரம்’ திரைப்படம்.
படப்பிடிப்பு சென்னை காரைக்குடி, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் இம்மாதம் வெளியாகவுள்ளது…” என்றார்.