தமிழ் நாட்டில் நிவின் பாலிக்கு என்று ஒரு தனி மவுசு ஏற்பட்டு இருக்கிறது.அவரது மலையாள படங்கள் தமிழ் நாட்டில் பேராதரவுடன் வெற்றி கரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.அண்மையில் வெளி வந்த அவரது முதல் நேரடி தமிழ் படமான “ரிச்சி” திரைப் படத்தின் டீஸர் , மிக குறைந்த காலக் கட்டத்தில் 7,00,000 பார்வையாளர்களை அடைந்து இருக்கிறது.தூத்துக்குடி, மணப்பாடு ஆகிய இடங்களில் தயாரிக்கப் பட்ட “ரிச்சி” வெகு விரைவில் வெளி வர உள்ளது.
