Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

சங்கமித்ரா படத்திற்கு வாள்வீச்சு பயிற்சி பெற்று வருகிறார். ஸ்ருதிஹாசன்

வாள்வீச்சில் பயிற்சி பெறும் ஸ்ருதிஹாசன்

அழகும், நடிப்புத்திறனும் ஒருங்கே பெற்ற நடிகை ஸ்ருதிஹாசன், பெரும் பொருட்செலவில் மூன்று மொழிகளில் சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா திரைப்படத்திற்காக வாள்வீச்சில் பயிற்சி பெற்று வருகிறார். போரில் வல்லமை படைத்த இளவரசியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், அதற்காகவே வாள்வீச்சு கலையை லண்டனில் கற்று வருகிறார்.
இதுகுறித்து படக்குழுவினர் கூறியதாவது, “வீரம் நிறைந்த இளவரசி கதாபாத்திரத்திற்காக ஸ்ருதிஹாசன் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்வதாகவும், அதற்காக வாள்வீச்சில் நிபுணத்துவம் பெற்ற சண்டைபயிற்சி கலைஞரிடம் லண்டனில் கற்று வருகிறார்” என்றனர். பயிற்சியின் முதல் கட்டமாக வாள்வீச்சின் அடிப்படை நுணுக்கங்களையும் பின்னர் அடுத்தடுத்த கட்டங்களையும் கற்று வருகிறார். இந்த பயிற்சியின் மூலம் திரையில் ஸ்ருதிஹாசன் சண்டையிடும் காட்சிகள் தத்ரூபமாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

Back To Top
CLOSE
CLOSE