Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

100% லவ்’ தெலுங்கு படத்தி்ன் தமிழ் ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்..!

கிரியேடிவ் சினிமாஸ் NY – NJ எண்டர்டெயின்மெண்ட்

தயாரிப்பில்

MM.சந்திரமௌலி இயக்கத்தில்

ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம்

2011ம் ஆண்டுத் தெலுங்கில் வெற்றிப்பட இயக்குனர் B.சுகுமார் இயக்கத்தில் நாகச் சைத்தன்யா தமன்னா நடிப்பில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வசூல் வேட்டை செய்த திரைப்படம் “100% லவ்”. தற்போது இப்படத்தைத் தெலுங்கில் இயக்கிய B.சுகுமார் தமிழில் கிரியேடிவ் சினிமாஸ் NY சார்பில் தயாரிக்கின்றார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை NJ எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கின்றது.

இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

பேக் வாட்டர்ஸ், நடாஷா உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவாளரும், பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஃப்ரெட் மர்பியிடம் பணியாற்றியவருமான MM.சந்திரமௌலி இப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார். சினிமா படிப்பில் பட்டம் பெற்றவரான இவர் கூறுகையில் பெரும் பொருட்செலவில் லண்டனில் தயாராகவுள்ள இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக உருவாகவுள்ளது எனக் கூறினார்.

சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, சிங்கம் எனப் பல ஹிந்தி வெற்றி படங்களை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய டட்லி இப்படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார்.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது எனத் தயாரிப்புதரப்பு கூறியுள்ளது.

Back To Top
CLOSE
CLOSE