Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

“உதயநிதிக்கும் எனக்கும் பொருத்தமான வேடம்..!” – நடிகை ரெஜினாவின் சந்தோஷம்..!

அழகும், திறமையும் ஒருங்கே வாய்க்க பெற்ற, ரசிகர்களை தன் அபார அழகால் கவர்ந்து இழுக்கும் துறுதுறு நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் ரெஜினா, எளிதாக எந்த ஒரு வேடத்திலும் பொருந்தி போகக் கூடியவர். தமிழ் சினிமாவில் தன் அதிர்ஷ்ட தேவதையாக வலம் வரும் இவர், நடித்தாலே அந்த படமும் வெற்றி படமாக மாறுவது தனிச்சிறப்பு.

மாநகரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்துள்ள ரெஜினா, இயக்குனர் எழில் படத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷமான விஷயம், மிகவும் சௌகர்யமான இயக்குனர் அவர். வணிக ரீதியான படத்துக்கு தேவையான சிறப்பான திரைக்கதையை அமைத்துள்ளார் எழில். எனக்கும், உதயநிதிக்கும் பொருத்தமான கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.

உதயநிதி மிகவும் எளிமையான மனிதர், அவரின் நகைச்சுவை உணர்வு அலாதியானது. அவரோடு நடித்தது ஒரு மறக்க முடியாத அனுபவம் என தன் ஹீரோ உதயநிதியை பற்றியும் புகழ்ந்து பேசுகிறார்.

சரவணன் இருக்க பயமேன் ஒரு முழுநீள பொழுதுபோக்கு படம், கோடை காலத்தில் குடும்பத்தோடு வந்து பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கும். இமானின் அற்புத இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. இசை மட்டுமல்லாமல் யுகபாரதியின் பாடல் வரிகளும் பேசப்படும் என்கிறார் இந்த அழகுப்புயல்.

Back To Top
CLOSE
CLOSE