Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஜீன் முதல் “யார் இவன்”

தெலுங்கில் ‘பீமிலி கபடி ஜட்டு’, ‘எஸ்.எம்.எஸ். ஷங்கரா’ ஆகிய படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட இயக்குநர் T.சத்யா இயக்கியிருக்கும் முதல் தமிழ் படம் ‘யார் இவன்’.

இந்தப் படத்தில் சச்சின் நாயகனாகவும் ஈஷா குப்தா நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் பிரபு, சதீஷ், தன்யா பாலகிருஷ்ணன், சுப்ரீத் ரெட்டி, சத்ரு, டெல்லி கணேஷ், ஹாரிஸ், வெண்ணிலா கிஷோர், கிஷோர் குமார் உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்துள்ளனர்.

விளம்பர டிஸைன்ஸ் – வெங்கட், பி.ஆர்.ஓ. – நிகில், நிர்வாகத் தயாரிப்பு – சிவபிரசாத் குடிமிட்லா, சண்டை பயிற்சி – கனல் கண்ணன், படத் தொகுப்பு – பிரவின் புடி, ஒளிப்பதிவு – பினேந்திரா மேனன், இசை – எஸ்.எஸ்.தமன், பாடல்கள் – நா.முத்துக்குமார், தயாரிப்பாளர் – ரெய்னா ஜோஷி, எழுத்து, இயக்கம் – டி.சத்யா.

படத்தின் இயக்குநரான டி.சத்யா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் உருவான ‘படகோட்டி’, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பில் உருவான ‘உத்தமபுத்திரன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய தமிழின் மிக மூத்த இயக்குநர்களில் ஒருவரான T.பிரகாஷ்ராவ் அவர்களின் பேரனாவார்.

‘யார் இவன்’ ஒரு காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர் திரைப்படம். சுவாரசியமான ஆக்‌ஷன் த்ரில்லர் படத்திற்கேற்ற திரைக்கதையில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரவிருக்கிறது என்கிறார்கள் படக் குழுவினர்.

Back To Top
CLOSE
CLOSE