Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் ‘96‘ திரைப்படம்

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’, விஷால் நடித்த ‘கத்திசண்டை’, விக்ரம் பிரபு நடித்த ‘வீரசிவாஜி’ போன்ற படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96 என்ற படத்தை தயாரிக்கிறார்.

கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், இசை – கோவிந்த் மேனன், படத் தொகுப்பு -கோவிந்தராஜ், கலை – வினோத் ராஜ்குமார், பாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா. எழுத்து, இயக்கம் – பிரேம்குமார். இவர் ‘பசங்க’, ‘சுந்தரபாண்டியன்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்

படம் பற்றி இயக்குநர் பிரேம்குமார் பேசும்போது, “இது முழுக்க, முழுக்க காதல் கதையாக உருவாகிறது. இந்த படத்திற்காக விஜய் சேதுபதி, திரிஷா இருவரது சிறு வயது கதாபாத்திற்கான நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு கும்பகோணத்தில் விரைவில் துவங்க உள்ளது…” என்றார்.

Back To Top
CLOSE
CLOSE