Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

‘வேட்டை நாய்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் இயக்குநர் பாலா

தன் பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலாவிடம் ஆசி பெற்று ‘வேட்டை நாய்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை பாலாவை வைத்தே வெளியிட்டிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ் .

இதுவரை தயாரிப்பு, விநியோகம் என்று வேறு வேறு தளங்களில் இயங்கி வந்த ஸ்டுடியோ 9 தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான சுரேஷ் , இயக்குநர் பாலா மூலம் ‘தாரை தப்பட்டை’யில் அறிமுகமான பின் வரிசையாகப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

வில்லனாக நடித்து வந்தவர் , இப்போது நாயகனாகி ‘தனி முகம்’, ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த ‘வேட்டை நாய்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை நேற்று இயக்குநர் பாலா வெளியிட்டார்.“என்னைச் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய குருநாதரும், தன் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய அண்ணனுமாகிய பாலா ஆசியுடன் தன்னுடைய பிறந்த நாளன்று பர்ஸ்ட் லுக் வெளியிடப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது…” என்றார் நடிகர் ஆர்.கே.சுரேஷ்.

இந்த நாள் படங்கள் வெளியாகும் வெள்ளிக்கிழமையாகவும் அமைந்து இருப்பதில் ஆர்.கே.சுரேஷுக்கு கூடுதல் மகிழ்ச்சி.

இந்நிகழ்வில் இயக்குநர் ஜெய்சங்கர், ஒளிப்பதிவாளர் எம்.முரளி, வில்லன் நடிகர் விஜய் கார்த்திக். தாய் மூவீஸ் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட ‘வேட்டை நாய்’ படக் குழுவினரும் கலந்து கொண்டனர்.

Back To Top
CLOSE
CLOSE