Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

‘சாட்டை’ அன்பழகன் இயக்கிய ‘ரூபாய்’ திரைப்படம் இந்த மாதம் வெளியாகிறது..!

இயக்குநர் பிரபு சாலமனின் காட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘சாட்டை’ பட இயக்குநர் அன்பழகனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ரூபாய்’.

இந்தப் படத்தில் ‘கயல்’ சந்திரன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றும் கிஷோர் ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர் மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல்ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – V.இளையராஜா, இசை – D.இமான், பாடல்கள் – யுகபாரதி, படத் தொகுப்பு – ஆர்.நிர்மல், கலை இயக்கம் – ஏ.பழனிவேல், நடனம் – நோபல், சண்டை பயிற்சி – மிராக்கிள் மைக்கேல், நிர்வாகத் தயாரிப்பு – ஜே.பிரபாகர், இணை தயாரிப்பு – ஆர்.ரவிச்சந்திரன், தயாரிப்பு – பிரபு சாலமன், எழுத்து, இயக்கம் – அன்பழகன்.

இந்தப் படத்தை ஜெ.கே.கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஜெ.ஜெயகிருஷ்ணன் மற்றும் ஆர்.பி.கே. எண்ட்டெர்டெயின்மெண்ட் இருவரும் இணைந்து தமிழகம் முழுவதும் வெளியிடுகின்றனர்.

இந்தப் படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், படத்தின் இசை உரிமை பெரிய விலைக்கு ஒரு முன்னணி நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் சென்ற ஆண்டு நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக ரிலீசுக்கு முன்னரே திரையிடப்பட்டது. அப்போது இப்படத்தை கண்டவர்கள், பணத்தின் மீதுள்ள ஆசைதான் அனைத்து தீமைகளுக்கும் வேர் என்பதை இயக்குநர் மிக அழகாக கமர்ஷியல் பாணியிலும், காதலின் உச்சத்திலும் படமாக்கியுள்ளார் என தெரிவித்தனர். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி, நிச்சயம் மக்களின் மனதை பாதிக்குமளவுக்கு இருப்பதாக இப்படத்தை கண்ட பிரபலங்களும், ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் இயக்குநரான அன்பழகன் இதற்கு முன்பு இயக்கிய சாட்டை படம் தமிழ்ச் சினிமாவின் மிக முக்கியமான படமாகவும், சமூக அவலங்களைச் சுட்டிக் காட்டும் தற்போதைய தமிழ்ச் சினிமாவின் போக்கிற்கு அடித்தளமிட்ட படமாகவும் இருந்ததினால் இந்தப் படமும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

படம் இந்த மாதம் கண்டிப்பாக வெளியாகும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Back To Top
CLOSE
CLOSE