Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

விரைவில் க்யூப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் படவிழாவில் ஞானவேல்ராஜா பேச்சு

தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழ் திரையுலகின் ‘க்யூப்’ பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டத்தில் பேசிய விஷால், “க்யூப் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும். புதிதாக வந்திருக்கும் ஒருவர் 22,500 ரூபாய்க்கு பதிலாக 5000 ரூபாய்க்கு தருகிறேன் என கூறியுள்ளார்” என்று பேசியிருந்தார்.

இதனிடையே தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு என தனியாக வாட்ஸ்-அப் குரூப் ஒன்று உள்ளது. அதில் இப்பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என சில தயாரிப்பாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு ஆடியோ வடிவில் பதிலளித்துப் பேசியுள்ளார் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஞானவேல்ராஜா.

அந்த ஆடியோ பதிவில் ஞானவேல்ராஜா பேசியது இது :

“அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.

க்யூப் விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், புதிதாக முதலீட்டாளர் ஒருவரைப் பிடித்துள்ளார். ஒரு படத்தின் முழுமையான ஓட்டத்துக்கு 22,500 வாங்கக் கூடிய இடத்தில் 5000 ரூபாயும் மற்றும் சிறு படங்களுக்கு 22,500 ரூபாய்க்கு பதிலாக 2,500 ரூபாய்க்கும் அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கு திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவு நமக்கு தேவைப்படுகிறது. அவர்களுடைய ஆதரவின்றி இதனை செயல்படுத்த முடியாது.

பெரிய படங்களின் தயாரிப்பாளரால் 22,500 ரூபாயை கட்டிவிட முடியும். இந்த முடிவால் சிறு முதலீட்டு படங்களின் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய பயனாக இருக்கும். அவர்களுடைய மொத்த பாரமும் கீழே இறக்கி வைத்துவிடக் கூடிய சூழல் ஏற்படும். அப்படியொரு சூழலை ஏற்படுத்துவதற்கு பெரிய படங்கள் மற்றும் சிறு படங்கள் தயாரிப்பாளர்கள் தங்களுடைய ஒற்றுமையை முதலில் கடைபிடிக்க வேண்டும்.

ஏதாவது ஒரு தேதியை முடிவு செய்துவிட்டு, அதற்கு மேல் இனிமேல் 23,500 ரூபாய் கட்ட மாட்டோம். 5000 ரூபாய் அல்லது 2500 ரூபாய் மட்டுமே கட்டுவோம் என்ற முடிவை எடுக்க வேண்டும்.

அதை மீறும் தயாரிப்பாளர்கள், ஒட்டு மொத்த தயாரிப்பாளர்களுக்கு செய்யும் துரோகமாகத்தான் எடுத்துக் கொள்ளப்படும். அப்படி யாராவது முறியடிக்க வேண்டும் என நினைத்தால், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து சங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என முடிவு எடுத்தோம் என்றால் இந்த க்யூப் பிரச்சினைக்கு ஒரு விடிவு காலம் வரும். அந்தக் காலம் வருவதற்கு நாட்கள் அதிகமாக இல்லை.

அனைத்து தயாரிப்பாளர்களும் ஒற்றுமையாக இருந்து முடிவு எடுக்கும்போது, 50% திரையரங்க உரிமையாளர்கள் ‘நாம் கஷ்டப்படுகிறோம். நமக்கு உதவியாக இருக்க வேண்டும்’ என சொல்கிறார்கள். ஆனால், இதர திரையரங்கு உரிமையாளர்களுடைய போக்கு வேறு மாதிரியுள்ளது.

இப்படி ஒரு சூழல் இருக்கும்போது, இப்பிரச்சினையைச் அவர்களிடத்தில் எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும். அவர்களும் நமது முடிவுக்கு கட்டுப்படுவது போல, சங்கத்தோடு பேசி அனைத்து தயாரிப்பாளர்களும் உழைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

உங்களுடைய ஆதரவும், முழு ஒத்துழைப்பும் இந்த ‘க்யூப்’ விஷயத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையோடு இதை முனைப்போடு செயல்படுத்தி வருகிறோம்” என்று பேசியுள்ளார் ஞானவேல்ராஜா.

Back To Top
CLOSE
CLOSE