A.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘88’.
இந்தப் படத்தில் மதன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக உபாஷ்னா ராய் நடிக்கிறார். மற்றும் டேனியல் பாலாஜி ஜெயப்பிரகாஷ், ஜி.எம். குமார், பவர் ஸ்டார் சீனிவாசன், அப்புக்குட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா, கடம் கிஷன், மீரா கிருஷ்ணன் இவர்களுடன் ஜான் விஜய்யும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – வெற்றி மாறன், இசை – தயாரத்னம், கலை இயக்கம் – ஆரோக்கியராஜ், பாடல்கள் – அறிவுமதி, மதன் கார்க்கி, நடனம் – காதல் கந்தாஸ், படத் தொகுப்பு – அவினாஷ், சண்டை பயிற்சி – சக்தி சரவணன், தயாரிப்பு மேற்பார்வை – ராம் பூபால், இணை தயாரிப்பு – வினோத், தயாரிப்பு – A.ஜெயக்குமார், எழுத்து-இயக்கம் – எம்.மதன்.
படம் பற்றி இயக்குநர் மதன் பேசும்போது, “இன்று விஞ்ஞானம் இறக்கை கட்டிப் பறக்கிறது. பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட செல்போன்களின் பயன்பாடு இன்று எல்லை கடந்து விட்டது. கைக்குள்ளேயே ஒரு உலகத்தை கொண்டு வந்த நவீனம்தான் செல்போன். எதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாதோ அதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிப்பதால் என்ன மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதைத்தான் இதில் அலசி இருக்கிறோம்.
அதிலும் பெண்கள் எதையெல்லாம் பகிரங்கமாகப் பேசக் கூடாது என்பதுதான் இந்தப் படத்தின் ஹைலைட் கதை. இதை கமர்ஷியல் கலந்து ஆக்ஷன் படமாக உருவாக்கி இருக்கிறோம். சென்னை மற்றும் ஆந்திரா, ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஜுலை 14-ம் தேதி படம் வெளியாகிறது…” என்றார்