Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

அஸ்வின் மற்றும் ஸ்வாதியின் வெற்றி கூட்டணியின் அடுத்த படம் ‘திரி’

அஸ்வின் மற்றும் ஸ்வாதியின் வெற்றி கூட்டணியின் அடுத்த படம் ‘திரி’ . இவர்கள் இருவரும் இதற்கு முன்பு ‘இதற்கு தானே ஆசை பட்டாய் ‘ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. திரியில் அஸ்வின் மற்றும் ஸ்வாதியுடன் சேர்ந்து ஜெயப்ரகாஷ், A L அழகப்பன் , டேனியல், சென்றாயன் மற்றும் அனுபமா குமார் போன்ற பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் திரு.அசோக் அம்ரித்ராஜ் இயக்கத்தில் இப்படத்தை Seashore Gold Productions என்கிற பட நிறுவனுத்துக்காக ,திரு.பால முருகன் மற்றும் பாலகோபி சேர்ந்து தயாரித்துள்ளனர்.

கதாநாயகன் அஸ்வின் பேசுகையில், ”திரி ஒரு அரசியல் சார்ந்த திரில்லர் படம் . ஆனாலும் இதில் குடும்ப பந்தங்களை பற்றி அழகாக பேசப்பட்டுள்ளது.action-காமெடி -காதல் மற்றும் செண்டிமெண்ட், ஆகியவற்றை சரியான அளவில் கலந்து தந்துள்ளார் இயக்குனர். இப்படத்தில் தந்தை -மகன் உறவு பற்றி மிக யதார்த்தமாகவும் அழகாகவும் காண்பித்துள்ளார் இயக்குனர். ஜெயப்ரகாஷ் சார் எனது அப்பாவாக நடித்துள்ளார். A L அழகப்பன் சார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘திரி’ சில சமுதாய அவலங்களை பற்றி பேசும் ஜனரஞ்சகமான குடும்ப படம். இப்படித்தான் திரைக்கதைக்காக இயக்குனர் அசோக் அம்ரித்ராஜ் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். காதல் மற்றும் காமெடி கட்சிகளும் மிக அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. எனது நடிப்பு வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான படமாகும் . இந்த வாய்ப்பினை எனக்கு தந்த எங்களது தயாரிப்பாளருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திரி ரிலீசிற்கு நாங்கள் அனைவரும் மிக ஆவலோது காத்துக்கொண்டிருக்கிறோம்” திரியின் தொழில்நுட்ப அணியும் பலம் வாய்ந்தவை ஆகும். ‘சதுரங்க வேட்டை ‘புகழ் K G வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார் , அஜீஸ் அசோக் இசையமைத்துள்ளார் , ராஜா சேதுபதி படத்தொகுப்பு செய்துள்ளார். ‘ஜூலை 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகா உள்ள ‘திரி ‘ மூலம் மக்கள் குடும்ப குடும்பமாக திரையரங்களிற்கு வந்து ஆதரவளிப்பார்கள்’ என நம்பிக்கையோடு கூறி விடை பெற்றார் நாயகன் அஸ்வின்.

Back To Top
CLOSE
CLOSE