Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

வில்லனாக நடிக்கும் நகைச்சுவை ”நடிகர்” நாகேஷ் பேரன்.!

IF
ஸ்ரீமணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக P.மணிமேகலை தயாரித்துள்ள படம் ‘நான் யாரென்று நீ சொல்.’

இந்த படத்தில் கீர்த்திதரன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘கல்கண்டு’ படத்தில் நாயகனாக அறிமுகமான பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரனும் நடிகர் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ், இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார்.

அம்மா வேடத்தில் சோனா நடிக்கிறார். மற்றும் ஆனந்த்பாபு பாண்டு கராத்தேராஜா மாறன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத் தொகுப்பு – பிரேம், பாடல்கள் – இளையகம்பன், சண்டை பயிற்சி – பம்மல் ரவி, இசை – ஜான் பீட்டர், ஒளிப்பதிவு – பாஸ்கர், நடனம் – ரவிதேவ், தயாரிப்பு – ஆர்.மணிமேகலை, எழுத்து, இயக்கம் – A.M.பாஸ்கர்.

இயக்குநர் ஏ.எம். பாஸ்கர் ஏற்கெனவே பல படங்களை இயக்கியிருக்கிறார். இன்றைய பிரபல நடிகையான லஷ்மி ராயை சினிமாவில் ‘குறுக்கெழுத்து’ என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

படம் பற்றி இயக்குநர் ஏ.எம்.பாஸ்கர் பேசுகையில், “சோனாவின் மகள் சுதா ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறாள். அதே நிறுவனத்தில் வேலை செய்யும் கஜேஷ் மற்றும் பேக்கரி தொழில் செய்யும் கீர்த்திதரன் இருவரும் அவளை காதலிக்க முயற்சிக்கிறார்கள்.

அதை தட்டிக் கேட்டு அவர்களை கண்டிக்கிறார் சோனா. அப்படி தட்டிக் கேட்ட அவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு கொலை செய்யப்படுகிறார். அவரை கொலை செய்தது யார் என்கிற தேடல்தான் இந்த ‘நான் யாரென்று நீ சொல்’ படத்தின் திரைக்கதை.

கிரைம், திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, கேரளா போன்ற இடங்களில் நடை பெற்றுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ளது..” என்றார்.

Back To Top
CLOSE
CLOSE