Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

கபாலி செல்வா ஆன நடிகர் செல்வா.


நடிகர் செல்வா தான் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடைய தீவிர ரசிகர் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரியப் படுத்தி இருக்கிறார். பல்வேறு படங்களில் கதா நாயகனாக நடித்து உள்ள இவர் கோல்மால் என்கிற வெற்றி படத்தை இயக்கியும் உள்ளார்.

நீண்ட இடை வெளிக்கு பிறகு இவர் இயக்கும் இரண்டாவது படம், ” 12 .12. 1950″. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் பிறந்த நாளை குறிப்பிடும் இந்த தலைப்பு ஒரு தீவிர ரஜினி ரசிகனை பற்றிய கதை என்கிறார் செல்வா. நேற்று நடிகர் சிவகார்திகேயனால் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த படத்தின் motion போஸ்டர் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்கள் இடையேயும் பெரிய வரவேற்ப்பு பெற்றது.

“இந்த படத்தின் தலைப்பு அவருடைய சாதனையை மட்டுமின்றி, அவரது பிறந்த நாளை மட்டுமின்றி, அவரது பிறப்பையே கொண்டாடும் ஒரு தீவிர ரசிகனை பற்றிய கதை . அவரது புகழும், சாதனையும், என்னை போன்ற ரசிகர்களுக்கு மிக பெரிய உந்துதல் ஆகும். 12 12 1950 அந்த மாமனிதனுடன் , அவரது சாமானிய ரசிகனுக்கு இருக்கும் உறவை பற்றி சொல்லும் உணர்வு பூர்வமான கதை .அவருடைய பஞ்ச் வசனங்களை எதையும் நாங்கள் பயன்படுத்தவில்லை. தான் தெய்வமாக கருதும், சூப்பர் ஸ்டாரின் படம் வெளி வரும் நாள் ஒரு ரசிகனுக்கு பண்டிகை போல. அத்தகைய ஒரு நாளில் அந்த படத்தை பார்க்க முடியாத சூழ் நிலை ஒரு ரசிகனுக்கு ஏற்படுகிறது. அது என்ன, அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை நகை சுவை கலந்து உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறோம். ரஜினி சாருடைய தீவிர ரசிகனாக நான் நடிக்க தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், டெல்லி கணேஷ், ஜான் விஜய், பொன்னம்பலம், ரமேஷ் திலக், ஆதவன், அஜய், சாமிநாதன், ரிஷா, ஷபி, அஸ்வினி சந்திரசேகர், பிரஷாந்த், மற்றும் பலர் நடிக்க இளம் இசை அமைப்பாளர்கள் ஆதித்யா – சூர்யா இசை அமைக்க, தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்ய, விஷ்ணு ஸ்ரீ ஒளி பதிவில், ஜ்யோஸ்டார் entertainment என்கிற பட நிறுவனத்தின் சார்பில் கோடீஸ்வர ராஜு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. Post production பணிகள் முழு வீச்சில் நடை பெறுகிறது. இந்த படம் 72% காமடி, 28 % GST ( Ganster, comedy and Thriller) என்று கூறினார் செல்வா

Back To Top
CLOSE
CLOSE