Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் மதன் கார்க்கி..!


தமிழ் திரை உலகில் புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் மதன் கார்க்கி, இயக்குனர் அருண் வைத்தியநாதன் பாராட்டு.

Action king அர்ஜுன் நடிக்கும் 150 ஆவது படம் “நிபுணன்”.இதில் இவருடன் பிரசன்னா, வரலக்ஷ்மி உட்பட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து உள்ளது. அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளி ஆனது. “இதுவும் கடந்து போகும்” என்கிற வரிகளுடன் துவங்கும் இந்தப் பாடல் மிக குறுகிய காலக் கட்டத்தில் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்று உள்ளது. அறிமுக இசை அமைப்பாளர் நவீணின் இசையில், பிரதீப் பாடி உள்ள இந்த பாடலை தனது ட்விட்டர் மூலம் மிகவும் பாராட்டி உள்ளார் பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி. அந்த பாடலை தான் இயற்ற வில்லை என்றாலும் , அந்த பாடலை இயற்றிய மற்றொரு கவிஞரை மனதார பாராட்டி உள்ளதை திரை உலகம் மனதார வரவேற்று உள்ளது. இந்த பாடலை எழுதி உள்ளவர் இயக்குனர் அருண் வைத்தியநாதன் என்பது குறிப்பிட தக்கது.

“மதன் கார்க்கியின் இந்த நல்ல குணமே அவரை இந்த இளம் வயதில் உச்சத்தில் உட்கார வைத்து உள்ளது. அறிமுகம் இல்லாத இன்னொருவர் இயற்றிய பாடலை ஒரு பாடல் ஆசிரியர் பாராட்டுவது , நமது கலாச்சாரத்தை ஒட்டி உள்ள நம் நல் குண நலனை பிரதிபலிக்கிறது.போட்டிகள் நிறைந்த இந்த படவுலகில் இவரை போன்ற இளைஞர்கள் இத்தகைய நட்பு மனப்பான்மை போற்றுவது எதிர்கால சினிமாவுக்கு நல்லது” என மகிழ்ச்சியுடன் கூறினார் இயக்குனர் , பாடல் ஆசிரியர் அருண் வைத்தியநாதன்.

Back To Top
CLOSE
CLOSE