Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

நிவின் பாலி நயன்தாரா நடிக்கவிருக்கும். ‘லவ்,அக்ஷன் , ரொமான்ஸ் ‘திரைப்படம்

மலையாள சினிமாவின் ஜாம்பவானான ஸ்ரீனிவாசனின் மூத்த மகன் வினீத் ஏற்கனவே இயக்குனராகி மாபெரும் வெற்றிகளை கொடுத்து வருகிறார். ஸ்ரீனிவாசனின் அடுத்த மகனான தியன் ஸ்ரீநிவாசன் தற்பொழுது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். ஸ்ரீனிவாசனின்மா, பெரும் வெற்றி பெற்று இன்று வரை கொண்டாடப்படும் படமான ‘வடக்குநோக்கியந்த்ரம்’ படத்தை இந்த தலைமுறைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து இயக்க உள்ளார் தியன் ஸ்ரீனிவாசன். இப்படத்திற்கு ‘லவ்,ஆக்ஷன், ரொமான்ஸ் ‘ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும் , அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

இது குறித்து தியன் ஸ்ரீனிவாசன் பேசுகையில், ” காலங்களை தாண்டி இன்று வரை ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் படம் ‘வடக்குநோக்கியந்த்ரம்’. அதில் அப்பா நடித்திருந்த ‘தினேசன்’ கதாபாத்திரம் யாராலும் மறக்க முடியாதது.அந்த கதையையும் , தினேசன் கதாபாத்திரத்தையும் எனது முதல் படத்திலேயே இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி. வடக்குநோக்கியந்த்ரத்தின் சாரத்தை மட்டுமே எடுத்து, சில மாற்றங்கள் செய்து அதை இந்த தலைமுறைக்கேற்ப தர உள்ளேன். நிவினும் நயன்தாராவும் இப்படத்தின் தூண்கள் .இந்த காதல் – காமெடி படத்தில் அஜூ வர்கஹீஸ் ஒரு முக்கி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பை துவங்க உள்ளோம் . இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் . விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்யவுள்ளார். இது எனக்கு முதல் படமாக இருந்தாலும், நயன்தாராவை தவிர இப்படத்தில் பணியாற்ற உள்ள எல்லா நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், நான் ஏற்கனவே பணியாற்றி உள்ளதால் , எந்த விதமான பதற்றமில்லாமல் என்னால் செயல்படமுடியும் ”

Back To Top
CLOSE
CLOSE