Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

மலையாள பட ரிமேக்கில் உதயநிதி ஸ்டாலின்!

மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற “மகேஷிண்டே பிரதிகரம்” தற்போது தமிழில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் , உதயநிதி ஸ்டாலின் கதா நாயகனாக நடிக்க, மூன் ஷாட் என்டேர்டைன்மெண்ட் என்கிற புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாராகிறது. இரண்டு தேசிய விருதுகள், ஐந்து மாநில விருதுகள், இரண்டு film fare விருதுகள் மற்றும் பல்வேறு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் விருதுகள் வென்ற “மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்துக்கு தமிழில் இன்னும் பெயர் சூட்டவில்லை என்பதுக் குறிப்பிட தக்கது. உதயநிதியுடன் பார்வதி நாயர் மற்றும் பிரபல மலையாள நடிகை நமீதா பிரமோத் ஆகியோர் நாயகிகளாக நடிக்க இவர்களுடன் சமுத்திரகனி, எம் எஸ் பாஸ்கர், மற்றும் கருணாகரன் நடிக்க உள்ளனர். சமுத்திர கனி வசனம் இயற்ற, டர்புக சிவா இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய உருவாகும் இந்தப் படத்தின் துவக்க விழா, சென்னையில் four frames ஒலிப்பதிவு கூடத்தில் நடந்தது. வருகின்ற 19 ஆம் தேதி எழில் கொஞ்சும் குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் தொடர்ந்து நடை பெற உள்ளது.

இயக்குனர் பிரியதர்ஷனும், உதயநிதியும் இணைந்து பணியாற்றும் முதல் படமான , இத்திரைப்படம் மிகவும் எதிர்பார்க்க படும் படமாக உருவாகும் என்பதில் ஐயமில்லை.

Back To Top
CLOSE
CLOSE