Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

வளரும் நடிகரை சூப்பர் ஸ்டாராக வாழ்த்திய பாக்யராஜ்..!

கடந்த வருடம் வெளியான ‘பட்டதாரி’ படம் மூலம், ரசிகர்கள் மனதில் பளிச்சென இடம்பிடித்தவர் தான் நடிகர் அபி சரவணன்.. வழக்கம்போல இவரும் ஒரு சாதாரண புதுமுகமாகத்தான் கடந்துபோயிருப்பார்.. ஆனால் சமூக நிகழ்வுகளில் இவர் தொடர்ந்து காட்டிவரும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் ரசிகர்களிடம் இவரை இன்னும் நெருக்கமாக்கி விட்டன என்பதே உண்மை.

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதோடு, மதுரை, அலங்காநல்லூர், புதுக்கோட்டை என அந்த மண்ணுக்கே நேரடியாக சென்று போராட்டங்களில் கலந்துகொண்டவர் சரவணன்.. நெடுவாசலுக்கு சென்று மீத்தேன் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பதாகட்டும், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாகட்டும் அனைத்து நிகழ்வுகளிலு அபி சரவணனை முதல் ஆளாக பார்க்க முடிந்தது.

விவசாயிகளுக்கான போராட்டங்களில் முன்னின்று பங்கேற்று வருகிறார்.. டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடிய விவசாயிகளுக்கு, திரையுலக பிரபலங்கள் மூலமாக சிறுசிறு உதவிகளையும் செய்து கொடுத்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ‘சதுர அடி 3500’ பட விழாவில் கலந்துகொண்ட அபி சரவணன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் பார்த்திபன் என்பவரின் மகளுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான நிதி உதவியை விழாவில் கலந்துகொண்ட கே பாக்யராஜ் முன்னிலையில் வழங்கினார்.

இதுபற்றி பாராட்டி பேசிய இயக்குனர் பாக்யராஜ், “நடிகர் அபி சரவணன் இந்த மேடையினை நெகிழ்ச்சியாக மாற்றிவிட்டார். வளரும் போதே முகம் தெரியாதவர்களுக்கு இவ்வளவு உதவிகளை செய்யும் இவரல்லவா சூப்பர் ஸ்டாராகவேண்டும். என்னுடைய வாய் முகூர்த்தம் பலிக்கும் என்பார்கள். அபி சரவணன் விசயத்தில் நடந்தால் சந்தோஷம்” என அபி சரவணனை புகழ்ந்து தள்ளிவிட்டார்..

இத்தனைக்கும் தற்போது ‘லுலு கிரேஷன்ஸ்’ தயாரிப்பில் மனோ இயக்கத்தில் ‘வெற்றி வேந்தன்’ என்கிற படத்தில் நடித்துவரும் அபி சரவணன், முதல்நாள் இரவு படப்பிடிப்பில் கழுத்தில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.. ஆனால் மறுநாள் தயாரிப்பாளர் பார்த்திபன் வந்துவிட்டார் என தகவல் தெரிந்ததும் உடனே ‘சதுர அடி 3500’ பட விழாவிற்கு வந்து அந்த உதவி தொகையை வழங்கிவிட்டு, அதன்பின்னர் மீண்டும் மருத்துவமனை சிகிச்சைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி அபி சரவணன் அவரது முகநுாலில் பதிவிட்டுள்ளதாவது …

தயாரிப்பாளர் என்பவர் சினிமாவில் கடவுளை போன்றவர்.. படியளக்கும் பகவானின் கஷ்டத்தில் பங்கெடுப்பது எனது கடமை… வறுமையில் வாடுபவர்களுக்கு உதவிகள் செய்யவேண்டும்.. ஆனால் தயாரிப்பாளராக பலருக்கு வேலை தந்து சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர் தன் மகளின் சிகிச்சைக்கு உதவியின்றி நிதியில்லாமல் வேதனைபட்டது தெரியவந்தது .. உடனடியாக ஒரே நாளில் நண்பர்கள் மூலமாக ஒரு லட்சம் ரூபாய் திரட்டினேன் .. அதுவும் கோபி மற்றும் ராகுல் அவர்கள் வெளியிடும் சதுரஅடி இசை வெளீயீடு மூலமாக இது சாத்தியமாயிற்று…

கேட்டவுடன் நிதி அளித்த …

Back To Top
CLOSE
CLOSE