Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

எனது பெயரை களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர் – சிம்பு

சமூக ஊடகங்களில் சினிமா நட்சத்திரங்களின் பெயரில் போலியான அக்கவுண்டுகளை தயாரித்து அதன் மூலம் போலியான தகவல்கள் மற்றும் கருத்துக்களை வெளியிட்டு அந்த நட்சத்திரங்களுக்கு களங்கம் விளைவிக்க ஒரு கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி நடிகர் சிலம்பரசன் அவரது ட்விட்டர் பதிவில் ஒரு கருது தெரிவித்ததாக சமீபத்தில் ஒரு செய்தி நிலவிவருகிறது. இது குறித்து சிம்பு பேசுகையில், “எனது பெயரை களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர் என்ற செய்தி எனக்கொன்றும் புதிதல்ல. இவற்றையெல்லாம் மீறி வெற்றி காண்பவன் நான். ஆனால் நான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி தனிப்பட்ட ட்வீட் ஒன்றை போட்டேன் என்பது முற்றிலும் பொய்யான , உண்மைக்கு மாறான, எனது மனதை புண்படவைக்கும் செய்தி.

பொறுப்பற்ற சிலர் எனது பெயரில் போலியான சமூக ஊடக அக்கௌன்ட் மூலம் இது போன்று ட்வீட் செய்வது எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை, அனால் இந்த உண்மையற்ற, போலியான செய்தியை சில ஊடகங்கள் நம்பி, அதனை வெளியிடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எந்த ஒரு ஊடகத்துக்கும் உண்மையான செய்தியை பொறுப்புடன் தருவதே முதன்மை காரியமாக இருக்க வேண்டும் என்பதை நம்புபவன் நான். இது போல் என் பெயரால் போலியாக உருவாக்கப்பட்டுள்ள அக்கௌண்ட்டுகளால் பரப்பப்படும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் எனது தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக வரும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுமாறு அணைத்து ஊடக நண்பர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்”.

Back To Top
CLOSE
CLOSE