Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

அஜித் தோன்றும் ஒவ்வொரு பிரேமும் பலத்த இடியை போல் இருக்கும் – விவேகம் படத்தின் எடிட்டர் ரூபன்

ஒரு திரைப்படத்தை ஆக்கவும் அழிக்கவும் கூடிய சக்தி வாய்ந்தது அதன் படத்தொகுப்பு. திறமையாக, நேர்த்தியாக படத்தொகுப்பு செய்யப்பட்ட எந்த ஒரு படமும் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றி கண்டுள்ளது. பெரிய பட்ஜெட் ஆக்ஷன் படமான ‘விவேகம்’ போன்ற ஒரு பிரம்மாண்ட படத்தில் படத்தொகுப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. தனது புதுமையான விறுவிறுப்பான ‘கட்’ களால் தமிழ் சினிமாவின் முக்கிய படத்தொகுப்பாளர்களில் ஒருவரான ரூபன், அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடித்து, சிவா இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில், வெற்றியின் ஒளிப்பதிவில் உருவாகி, ஆகஸ்ட் 24 ஆம் தேதி உலகம் முழுவது பிரம்மாண்டமாய் ரிலீஸாகவுள்ள ‘விவேகம்’ படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

இது குறித்து படத்தொகுப்பாளர் ரூபன் பேசுகையில், “விவேகம், படம் முழுவது கைதட்டி கொண்டாடக்கூடிய, ஒரு உண்மையான, பிரம்மாண்டமான சர்வதேச உளவு படம். திரையில் அஜித் சார் தோன்றும் ஒவ்வொரு பிரேமும் பலத்த இடியை போல் மிக வலுவாக இருக்கும். அவரது அசுர உழைப்பை கண்டு வியந்தேன். அவ்வளவு சிறப்பாக அவர் செய்துள்ளார்.அவர் இப்படத்தில் செய்திருக்கும் ஆபத்தான சண்டை காட்சிகள் பார்ப்பவர்கள் வாயை பிளந்து பார்க்கும் வகையில் இருக்கின்றது. இப்படத்தின் ‘தலை விடுதலை’ பாட்டின் காட்சியமைப்பு ‘ஆலுமா டோலுமா’ பாடலை விட பத்து மடங்கு ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அஜித் சாரின் ரசிகர்களுக்கும் , பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் ‘விவேகம்’ ஒரு மாபெரும் கொண்டாட்டமாக நிச்சயம் இருக்கும். இயக்குனர் சிவா சாருடன் பணிபுரிவது அற்புதமான அனுபவம். எங்கள் இருவருடைய சிந்தனை போக்கில் நிறைய ஒற்றுமை இருப்பதால் எனது பனியை மேலும் திறம்பட செய்யமுடிகிறது. அவர் என் மேல் வைக்கும் நம்பிக்கை எனக்கு மேலும் உழைக்க தூண்டுதலாக இருக்கின்றது. இது ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக இருந்தாலும் இதில் வரும் கணவன் மனைவி காட்சிகள் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது. ‘விவேகம்’ ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆகஸ்ட் 24 அன்று திரை அரங்குகளில் ரசிகர்கள் வெள்ளத்தோடு ‘விவேகம் ‘ படத்தை காண ஆவலோடு இருக்கிறேன்” என்கிறார் ரூபன்.

Back To Top
CLOSE
CLOSE