Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

நாசாவின் சாதனையை விட சூப்பர்ஸ்டார் சாதனை பெரியது – நடிகர் செல்வா

“‘நாசா’ வுக்கு எப்படி ஒரே ஒரு ‘வாயேஜர்’ விண்கலமோ, அது போல் எங்களுக்கு ஒரு ஒரு சூப்பர் ஸ்டார்” எனக்கூறியுள்ளார் இயக்குனர் மற்றும் நடிகர் கபாலி செல்வா. கபாலி செல்வா அவர்களின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘12.12.1950’ படம் என்றுமே புகழின் உச்சியிலும், மக்களின் மனத்திலும் ஆட்சி நடத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒரு தீவிர ரசிகன் பற்றிய படமாகும்.

இப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் நேற்று தங்களது ‘வாயேஜர்’ விண்கலம் விண்ணுக்கு சென்று 40 ஆண்டு காலம் ஆகியுள்ளதை கொண்டாடியது. இதனை தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சாதித்து, விண்வெளியையும் மிஞ்சும் ரசிகர் படை கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கபாலி செல்வா ‘நாசா’ விண்வெளி மையத்திற்கு சூப்பர் ஸ்டாரின் புகழை பற்றியும் 40 ஆண்டு கால சாதனைகள் பற்றியும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் கபாலி செல்வா.

இது குறித்து அவர் பேசுகையில் , “என்னை போன்ற கோடான கோடி தீவிர சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ரஜினி சாரின் இந்த 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளின் சாதனை ‘வாயேஜர்’ விண்கலம் செய்துள்ள சாதனையை விட மிக பெரியது. தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவிலேயே எண்ணற்ற தடைகளையும் சோதனைகளையும் இவ்வளவு ஆண்டுகளாக கடந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கும் ரஜினி சாரை பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் , ‘வாயேஜர்’ விண்கலத்தின் 40 ஆம் ஆண்டை கொண்டாடும் ‘நாசா’ விண்வெளி மையத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பற்றிய, அடுத்த மாதம் ரிலீசாக போகும் எனது படமான ‘12.12.1950’ உலகத்தில் உள்ள எல்லா ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சமர்ப்பணமாகும். ரஜினி சாரின் பிறப்பை, அவரது பிறந்த நாளன்று மட்டும் கொண்டாடாமல், தினந்தோறும் கொண்டாடும் ரசிகர்கள் நாங்கள் ”

Back To Top
CLOSE
CLOSE