Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

உண்மைக்கதையில் வாழ்ந்தவரையே கதாநாயகனாக நடிக்க வைத்த இயக்குனர்

PNP CINEMAS தயாரிப்பில் இயக்குனர் தினேஷ் பாபு இயக்கும் படம் “கிருஷ்ணம்”. அறிமுக நாயகனாக அக்சய் கிருஷ்ணன் ,அஸ்வரியா ,மமிதா பஜ்ஜு நடிக்கிறார்கள் . தமிழ் , தெலுங்கு ,மலையாளம் என்று மூன்று மொழிகளில் வெளியிடப்படுகிறது .

படத்தின் இயக்குனர் தினேஷ் பாபு ஒளிப்பதிவாளராக பல வருடங்கள் மலையாளத்திலும் , கன்னடத்திலும் பணியாற்றியவர் வித்தியாசமான கதைக்கள அமைப்பில் “கிருஷ்ணம் ” படத்தை இயக்கியிருக்கிறார் . இந்த கதை ஒரு ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் . இந்த கதையை படமாக்க முயற்ச்சி செய்து கதா நாயகனாக நடிக்க பல நடிகர்களை தேர்வுசெய்து இருக்கிறார் . ஆனால் யாரும் பொருத்தமானவர்களாக அமையவில்லையாம் . கடைசியில் எந்த இளைஞனின் கதையை படமாக்க நினைத்தாரோ அவரையே கதாநாயகனாக்க முடிவு செய்து கடைசியில் அவரையே வைத்து படத்தை இயக்கி முடித்துவிட்டார் .

நாயகனுக்கு உண்மையில் சிரித்த , அழுத நாட்களை சினிமாவுக்காக மீண்டும் ஒருமுறை கேமராவுக்கு முன்னால் நடித்தது பெரும் சவாலாக இருந்ததாம், இயக்குனர் சொல்லிக்கொடுக்காமலேயே சில காடசிகளில் மிக தத்ருபமாக நடித்தாராம் .

உண்மை சம்பவத்தில் வாழ்ந்தவர்களை சினிமாவுக்காக மீண்டும் ஒருமுறை கேமரா முன்பு நடிக்க வைப்பது என்பது பெரும் சவால் அதை தான் சிறப்பாக செய்திருப்பதாக கூறுகிறார் இயக்குனர் தினேஷ் பாபு.

தமிழ் தெலுங்கு மலையாளத்தில் வெளியாகும் இந்தப்படத்திற்கு ஹரி நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் தினேஷ் பாபு, பாடல்கள் சந்தியா,
தயாரிப்பாளர் PN பல்ராம்.

Back To Top
CLOSE
CLOSE