Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

கோலி சோடா 2வில் இயக்குனர் கவுதம் மேனன்

சரியான முறையில் பயன்படுத்தப்பட்ட ‘பின்னணி வர்ணனை’ எந்த ஒரு படத்துக்கும் மதிப்பு சேர்க்கும். அதுவும் ஒரு பிரபலமான ஒருவரின் குரலில் அது செய்யப்படும் பொழுது, அந்த காட்சியமைப்புக்கு அது இன்னும் தீவிரத்தை பெற்று தரும். விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கோலி சோடா 2’ படத்தில் டீஸர் தயாராகியுள்ளது. இந்த டீசருக்கு பின்னணி வர்ணனை வழங்க பிரபல இயக்குனர் கவுதம் மேனனை அணுகினார் விஜய் மில்டன். இதனை ஏற்றுக்கொண்டு கவுதம் மேனன் கொடுத்துள்ள பின்னணி வர்ணனை பிரமாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.

“மிக அருமையாக வந்திருக்கும் ‘கோலி சோடா 2’ வின் டீசருக்கு ஒரு அழுத்தமான பின்னணி வர்ணனை தேவைப்பட்டது. இயக்குனர் கவுதம் மேனனின் குரலும் அதன் தனித்தன்மையும் எனக்கு எப்பொழுதுமே பிடிக்கும். எனக்கும் எனது படங்களுக்கும் என்றுமே பக்கபலமாக இருக்கும் இயக்குனர் லிங்குசாமி மூலம் கவுதம் அவர்களை அணுகி இந்த பின்னணி வர்ணனை பற்றி கூறி , செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டோம். எங்கள் கோரிக்கையை உடனே ஒப்புக்கொண்ட கவுதம் அவர்கள் எதிர்பார்த்ததை விட மிக பிரமாதமாக பின்னணி வர்ணனை செய்து கொடுத்தார். இந்த டீசரை ரசிகர்கள் நிச்சயம் விரும்புவார்கள் என நம்புகிறேன். இது போன்ற நல்ல உள்ளம் படைத்த இயக்குனர்கள், எங்கள் படங்களுக்கு கொடுக்கும் பெரிய ஆதரவிற்கு நான் என்றுமே கடமைப்பட்டுள்ளேன்” என நன்றி தெரிவித்தார் விஜய் மில்டன்.

Back To Top
CLOSE
CLOSE