Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

அரசியலை அலசும் படத்தில் அருள்நிதி

மக்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை மகிழ்விக்க மட்டும் இன்றி சிந்திக்கவும் வைக்கும் படத்தை எழுதி இயக்குவது ஒரு அரிய கலையாகும். இக்கலையில் கைதேர்ந்த ஒரு சில இயக்குனர்களில் கரு பழனியப்பன் ஒருவர். தனது சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர் அவர். அதன் மூலம் சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர். இவர் தனது இயக்கத்தில் அடுத்த படத்தை துவக்கவுள்ளார். பெயரிட படாத இந்த படம் சம கால அரசியலை அலசும் படமாகும். தரமான மற்றும் வித்தியாசமான கதைகளை தேடி கண்டுபிடித்து நடிக்கும் நடிகர் அருள்நிதி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அவரது வளர்ச்சி இப்படம் மூலம் ஒரு புதிய உயரத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘மரகத நாணயம்’ படத்தை தயாரித்த ‘ஆக்ஸிஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் டில்லி பாபு இப்படத்தை தயாரிக்கவுள்ளார். கதாநாயகி மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைப் பெற்று கொண்டு இருக்கிறது. ஏற்கனவே அருள் நிதி கதாநாயகனாக நடிக்க ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்ற தலைப்பில் ஒரு படமும், ‘ராட்சஸன்’ என்ற தலைப்பில் விஷ்ணு விஷால் நடிக்கும் படங்கள் Axess Film Factory தயாரித்து வருவதுக் குறிப்புடத்தக்கது.

Back To Top
CLOSE
CLOSE