Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

“விவேகம்” தமிழ் சினிமா பெருமை படும் படமாக இருக்கும்

ஒரு சர்வதேச உளவாளி திரைப்படம் உண்மையிலே சர்வதேச தரமாவது அதன் கதையம்சத்தில் மட்டுமல்லாமல், அதன் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பிலும் தான்.

‘விவேகம்’ போன்ற ஒரு பிரம்மாண்ட சர்வதேச தர தமிழ் படத்திற்கு சரியான தளத்தை அமைப்பதில் கலை இயக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கும். ‘விவேகம்’ படத்தின் கலை இயக்குனர் திரு.மிலன், இப்படத்திற்காக இதுவரை அவர் கையாளாத சில நுணுக்கங்களை கையாண்டுள்ளார் என கூறப்படுகிறது. இந்திய சினிமாவின் முதல் உளவு த்ரில்லரான இப்படத்தில் அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடிப்பில், சிவா இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

‘விவேகம்’ குறித்து இப்படத்தின் கலைஇயக்குனர் மிலன் பேசுகையில், “விவேகம் படத்தில் பணிபுரிந்து ஒரு அற்புதமான அனுபவம். நாம் இதுவரை பார்த்த படங்களிலிருந்து இப்படத்தின் கதையும் உருவாக்கப்பட்ட விதமும் மிகவும் வித்தியாசமானது. இது ஒரு சர்வேதேச தர படம். இப்படம் பிரம்மாண்டமாக மட்டும் இல்லாமல் தொழில்நுட்பத்திலும் சர்வதேச தரத்தில் இருக்கும். தமிழ் சினிமா பெருமை படும் படமாக இது இருக்கும். கதைக்கு தேவைப்பட்ட, மனிதர்கள் தடம் பெரிதும் இல்லாத இடங்களை தேடி கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தினோம். உறையும் குளிரில் படப்பிடிப்பு நடத்தும் மிக சவாலான காரியத்தை எங்கள் அணி திறம்பட செய்தது . சில வித்தியாசமான சுவாரஸ்யமான கலை டிசைன்களை இப்படத்தில் பின்பற்றியுள்ளேன். உழைப்பிலும் அர்பணிப்பிலும் எங்கள் எல்லோர்க்கும் அஜித் சார் முன்னோடியாக இருந்தார். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமை. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. கலை இயக்கத்தில் சில புதிய பாணிகளை ஆராய்ந்து செயல்படுத்த இயக்குனர் சிவா எனக்கு முழு சுதந்திரமும் ஊக்கமும் தந்தார். ‘விவேகம்’ படத்திற்கான அவரது உழைப்பும் பிரம்மாண்ட சிந்தனைகளும் எங்கள் எல்லோரையும் மிகவும் ஈர்த்தது. இப்படம் அஜித் சார் ரசிகர்களுக்கும் மற்ற பொது ரசிகர்களுக்கும் “விவேகம்” பெரும் கொண்டாட்டமாக நிச்சயம் இருக்கும்”.

Back To Top
CLOSE
CLOSE