Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

தேர்தல் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தை மையமாக கொண்ட படம் ‘தப்பு தண்டா’

‘தேர்தல் ஓட்டுக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் மன்னிக்கமுடியாத குற்றம்” என்ற ‘உலகநாயகன்’ கமல் ஹாசனின் பிரபல வாக்கியம் மக்களின் மனத்திலும் ஆழமாக பதிந்துள்ளது. இதனை மையமாக வைத்து செப்டம்பர் 8 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் படம் ‘தப்பு தண்டா’

மாநில தேர்தல் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தை மையமாக கொண்ட படம் வெளியாவதற்கு உகந்த காலம் இது என பலரால் கருதப்படுகிறது.

பல பிரபல இயக்குனர்களுக்கு ஆசானாக கருதப்படும் மறைந்த இயக்குனர் பாலு மகேந்திரா சினிமா பட்டறையிலிருந்து பயின்று வெளிவந்த ஸ்ரீகண்டன் இயக்கியுள்ள ‘தப்பு தண்டா’ திரைப்படம் செப்டம்பர் 8 அன்று ரிலீஸாகவுள்ளது. ‘மாநகரம்’ , ‘ஜோக்கர்’ போன்ற காமெடி /திரில்லர் படங்களுக்கு கிடைத்த வெற்றி அதே வகையான சினிமாவை சார்ந்த ‘தப்பு தாண்டா’ படத்துக்கும் பெரிதளவு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீகண்டன் பேசுகையில், “இக்கதையை தயார் செய்து முடிக்க எனக்கு ஒரு வருடம் ஆனது. ஏனென்றால் இக்கதைக்கு அவ்வளவு விரிவான ஆராய்ச்சியும் களப்பணியும் தேவைப்பட்டது. அது இல்லாவிட்டால் இவ்வாறான ஒரு தேர்தல் பிரச்சாரம் கதைக்கு வலு இருக்காது. தேர்தலையும், தேர்தல் பிரச்சாரத்தையும், ஓட்டுக்காக பணம் தரும் பாணியையும் மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள காமெடி திரில்லர் தான் ‘தப்பு தண்டா’. இப்படத்தில் மூன்று கதைகள் உள்ளன. சினிமா ரசிகர்களுக்கு நாங்கள் இப்படத்தில் கையாண்டிருக்கும் வித்தியாசமான காமெடி பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன். சத்யா, ஸ்வேதா கய் மற்றும் உதயா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் பிரமாதமாக நடித்துள்ளனர். மைம் கோபி, அஜய் கோஷ் மற்றும் ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் சினிமா ரசிகர்கள் ‘தப்பு தாண்டா’ படத்தை திரையரங்கங்களில் ரசித்து கொண்டாடுவார்கள் என நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் உள்ளேன்”.

Back To Top
CLOSE
CLOSE