Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

கல்வி முறை பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘பாடம்’

நமது நாட்டின் கல்வி முறையில் கொண்டுவரப்பட்ட சில குழப்பங்களால் பலிவாங்கப்பட்ட ஒரு உயிருக்காக நமது சமுதாயமே கொந்தளித்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில் இது போன்ற ஒரு கல்வி முறை பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘பாடம்’.

இயக்குனர் ராஜேஷுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள ராஜசேகர் ‘பாடம்’ படத்தை இயக்கியுள்ளார். ‘Rollon Movies’ சார்பில் திரு.ஜிபின் இப்படத்தை தயாரித்துள்ளார். கதாநாயகனாக புதுமுகம் நடிகர் கார்த்திக்கும் கதாநாயகியாக புதுமுக நடிகை மோனாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளி மாணவர்களாக இப்படத்தில் நடித்துள்ளனர் . நடிகர் விஜித் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ‘பாடம்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் ராஜசேகர் பேசுகையில் , ”சமீபத்தில் கூட ஒரு உயிரை பறித்த ஒரு முக்கிய சமுதாய பிரச்னையை பற்றி தன் ‘பாடம்’ பேசும். தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் மீது ஆங்கில கல்வியையும் மொழியையும் திணித்தால் நடக்கும் சீர்கேடுகள் பற்றியே படம் இது . ஆங்கிலம் என்பது வெறும் ஒரு மொழியே தவிர வாழ்வு முறை கிடையாது என்பது நம்மில் பலருக்கு புரிவதில்லை. இதனை மையமாக வைத்து, ஒரு மாணவனுக்கும் அவனது ஆசிரியருக்கும் இடையே நடக்கும் ஒரு போர் தான் ‘பாடம்’ . இந்த போரில் மாணவன் எப்படியெல்லாம் சவால்களை சந்தித்து வெற்றிபெற்றான் என்பதே இப்படத்தின் கதை. புத்துணர்வும் தன்னம்பிக்கையும் ஊட்டும் படமாக இது இருக்கும். நமது முறையற்ற கல்விமுறையையும் , பெற்றோர்களின் மனநிலையையும், மாணவர்கள் மீது போடப்படும் சமுதாய அழுத்தங்களையும் இப்படம் அலசும்.எல்லா மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களை ‘பாடம் ‘ கதையுடன் இணைத்துக்கொண்டு ரசித்து மகிழ்வார்கள் என நம்புகிறேன் ”

இப்படம் கணேஷ் ராகவேந்திராவின் இசையில், மனோவின் ஒளிப்பதிவில், ஜிபினின் படத்தொகுப்பில், ‘ஆக்ஷன்’ பிரகாஷின் சண்டை காட்சியமைப்பில், பழனிவேலின் கலை இயக்கத்தில் உருவாகியுள்ளது.

Back To Top
CLOSE
CLOSE