Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நயன்தாரா

த்ரில்லர் கதைகள் மூலமாக வெற்றிகளை தந்த ஒரு இயக்குனர், புகழிலும் ரசிகர்கள் மனதிலும் உச்சியில் இருக்கும் ஒரு பெண் சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தந்தால் அது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தனது முதல் படம் முதல் தனது சமீபத்தைய ”குற்றம் 23′ படம் வரை பல வெற்றிகளை தந்த இயக்குனர் அறிவழகன் , நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.

இது குறித்து இயக்குனர் அறிவழகன் பேசுகையில், ”ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்போகும் இந்த சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நயன்தாரா போன்ற ஒரு திறமையுள்ள நட்சத்திரம் நடிக்க இருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. அவரது நட்சத்திர அந்தஸ்தும் நடிப்பு திறனும் இக்கதையை மேலும் சிறப்பாக்கும். படத்தின் தயார் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் மாதம் இறுதியிலோ அல்லது ஜனவரி மாதம் தொடக்கத்திலோ படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் ஒரு பகுதிக்கு நயன்தாராவிற்கு ஜோடியுள்ளது ஆனால் இப்படத்தின் ஹீரோ என்று யாரும் கிடையாது. நயன்தாராவின் கதாபாத்திரம் தான் ஹீரோ. இது போன்ற ஒரு கதையை இயக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு ரொம்ப காலமாகவே இருந்தது. அது இப்பொழுது நிறைவேற இருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. சென்னையில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது . 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுளோம்.”

இப்படத்தை ‘S P சினிமாஸ்’ திரு. ஷங்கர் தயாரிக்கவுள்ளார். தமனின் இசையில், KM பாஸ்கரனின் ஒளிப்பதிவில் இப்படம் உருவாகவுள்ளது.

Back To Top
CLOSE
CLOSE