Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

உறையவைக்கும் ஒரு பேய் படத்தில் நடிக்கும் சித்தார்த்

தனக்கு கொடுக்க பட்ட எந்த ஒரு கதாபாத்திரத்திற்குள்ளும் மிக எளிதாகவும் அழகாகவும் நுழைந்து அசத்துபவர் நடிகர் சித்தார்த். ஒரே மாதிரியான படங்களில் என்றுமே நடிக்காத ஒரு அரிய நடிகர் அவர். அவரது நடிப்பில் உருவாகும் அடுத்த படமான ‘அவள்’ ஒரு பேய் படமாகும். சுவாரஸ்யமாக எடுக்கப்பட்ட, உண்மையான அச்ச உணர்வை தூண்டும் பேய் படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் பாலும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த சில ஆண்டு காலமாக உண்மையான பேய் படங்களை விட பேய் காமெடி படங்களே தமிழ் சினிமாவில் வெளி வர ஆரம்பித்து, மக்களிடத்தில் பேய் படம் பார்க்கும் போது வரும் அச்ச உணர்வை தகர்த்து விட்டது என்று கூறலாம். இது பேய் படம் ரசிக்கும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்து வந்தது.

இந்நிலையில் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியாவின் நடிப்பில், இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மிலிண்ட் ராவ் இயக்கத்தில், ‘Etaki Entertainment’ நிறுவனமும் ‘Viacom 18 Motion Pictures’ நிறுவனமும் இணைந்து இந்த உறையவைக்கும் ஒரு பேய் படத்தை “அவள்” என்ற தலைப்பில் தயாரித்துள்ளனர். சில தினங்களுக்கு முன் வெளியான ‘அவள்’ படத்தின் டீஸர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திகிலில் உறையவைக்கும் ஒரு உண்மையான பேய் படத்தை காண உள்ளோம் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைத்துள்ளது இந்த டீஸர். இந்த டீஸர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றது. சிறந்த ஒளிப்பதிவு, பயம் உண்டாக்கும் இசையமைப்பு, படமாக்கியுள்ள விதம், சொல்லப்படவுள்ள கதை, நடிகர்களின் அபாரமான நடிப்பு ஆகியவை இந்த டீசருக்கு இவ்வளவு பெரிய வெற்றியை தந்துள்ளது. உண்மையான பேய் பட ரசிகர்களுக்கு ‘அவள்’ திரைப்படம் ஆங்கில படங்களுக்கு இணையாக இருக்கும் ஒரு திகில் படம் எனக் கூறலாம்.

Back To Top
CLOSE
CLOSE