Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

வலுவான கதையம்சம் கொண்ட படம் ‘அறம்’

சமுதாய அவலங்களை பற்றி பேசும் படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் இந்த காலகட்டத்தில், ஒரு சமுதாய பிரச்னையை அழுத்தமாகவும் அழகாகவும் கூறியுள்ள படம் தான் ‘அறம்’. கோபி நைனார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை கொட்டப்படி J ராஜேஷ் தயாரித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘அறம்’. ‘விக்ரம் வேதா’ போன்ற தரமான படங்களை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்து , தங்களது நிறுவனத்துக்கு பெரும் பெயரை ஈன்றெடுத்த ‘Trident Arts’ நிறுவனம் ‘அறம்’ படத்தை நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளது.

இது குறித்து ‘Trident Arts’ ரவீந்திரன் அவர்கள் பேசுகையில், ” இந்த வருடத்தின் முக்கியமான படங்களில் ஒன்றாக ‘அறம்’ இருக்கும். அவ்வளவு வலுவான கதையம்சம் கொண்ட படம் இது. இயக்குனர் கோபி நைனார் இந்த கதையை அருமையாக கையாண்டுள்ளார். ஒரு நேர்மையான கலெக்டராக நயன்தாரா அசத்தியுள்ளார். ‘அறம்’ படத்தை ரிலீஸ் செய்வதில் எங்களுக்கு மிகுந்த பெருமை” என்று கூறினார். ஜிப்ரானின் இசையில், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவு அதிகரித்துள்ளது.

Back To Top
CLOSE
CLOSE