Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

,கூட்டம் கூட்டமாக மக்களை திரையரங்கிற்கு அழைத்து வந்துள்ளது ‘அவள்’

ஹாலிவுட் திகில் படங்களுக்கு தமிழ் திகில் படங்கள் இணையில்லை என்ற காலம் ‘அவள்’ படம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. கதையம்சத்திலும், சிறந்த தொழிலநுட்ப திறனாலும் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டி போட்டு பேய் ஓட்டம் ஓடிக் கொண்டு இருக்கிறது. சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி நடிப்பில், அறிமுக இயக்குனர் மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகி ரிலீஸாகியுள்ள ‘அவள்’,கூட்டம் கூட்டமாக மக்களை திரையரங்கிற்கு அழைத்து வந்துள்ளது. இப்படத்தை சித்தார்த்தின் ‘Etaki Entertainment’ நிறுவனம், ‘Viacom18 Motion Pictures’ நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளது. ‘அவள்’ படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்துள்ள ‘Trident Arts’ ரவீந்திரன் அவர்கள் இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்ப்பால் உற்சாகத்தில் உச்சியில் உள்ளார்.

‘அவள்’ குறித்து திரு. ரவீந்திரன் பேசுகையில், ”படத்தை பார்த்துவரும் மக்களிடையும் விமர்சகர்களிடையும் இப்படத்திற்கு அபாரமான வரவேற்பும் பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது. இது எனக்கு மிக பெரிய மகிழ்ச்சி அளித்தாலும், இது நான் எதிர்பார்த்தது தான்.ஏனென்றால் ‘அவள்’ அவ்வளவு சிறப்பான படம். ‘மிகப்பெரிய ஹிட் படம் ‘ என்ற அந்தஸ்தை நோக்கி மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் உண்மையான, சிறப்பான திகில் படத்திற்குரிய ஆளுமையை நிருபித்துள்ளது. இயக்குனர் மணி ரத்னத்தின் பள்ளியிலிருந்து பயின்று வந்து இப்படத்தை இயக்கியுள்ள மிலிண்ட் ராவ் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள ஒரு முக்கியமான வரவு. அவ்வளவு சிறப்பாக இப்படத்தை செதுக்கியுள்ளார். கதையம்சத்திலும்,தொழில்நுட்ப ரீதியிலும் இப்படத்தை உச்சத்திற்கு கொண்டுபோய்யுள்ளார். இது மக்களிடையே பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இப்படத்தின் எல்லா நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ‘அவள்’ படத்தை ரிலீஸ் செய்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி மற்றும் பெருமை. எனது வெற்றி பட பட்டியலில் ‘அவள்’ ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது ”.

Back To Top
CLOSE
CLOSE