Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ரம்மி பட இயக்குனர் பாலகிருஷ்ணன்.K இயக்கத்தில் குரு சோமசுந்தரம் – ரகுமான் நடிக்கும் “ கதாயுதம் “

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற “ ரம்மி “ படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன்.K இயக்கும் அடுத்த படத்திற்கு “ கதாயுதம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ பட நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. ரம்மி படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்நிறுவனம் தாயரிக்கும் படம் இது.

ஜோக்கர் படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான நடிகராக கவனிக்கப் பட்டவர் குருசோமசுந்தரம். துருவங்கள் 16 படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வந்தவர் ரகுமான். இந்த இருவரும் “ கதாயுதம் “ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக இந்திய பாக்கிஸ்தான் படத்தின் நாயகி சுஷ்மா ராஜ் நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட், துளசி, ரமா, பாரதிகண்ணன் ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.

வசனம் – மோநா.பழனிச்சாமி

ஒளிப்பதிவு – ஞானம்

இசை – ஸ்ரீகாந்த் தேவா

பாடல்கள் – கபிலன், மோநா பழனிச்சாமி

எடிட்டிங் – சசிகுமார்.ஜி

கலை – R. விஜயகுமார்

நடனம் – பிருந்தா, சிவராக் சங்கர்

ஸ்டண்ட் – சக்திசரவணன்

தயாரிப்பு மேற்பார்வை – S. ஆனந்த்ராஜ்

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் – பாலகிருஷ்ணன்.K

ரம்மி படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த படத்தை இயக்குகிறார்.

தயாரிப்பு – ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ.

படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது… வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்கும் அப்படி கனவுகளோடு இருக்கிற இரண்டு பேர் சந்திக்கிறதும், அவங்க கனவு நிறைவேற போராடுறதும் தான் கதை. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படபிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் பாலகிருஷ்ணன்.K

Back To Top
CLOSE
CLOSE