Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

புரட்சிகரமான வரிகளோடு வெளிவந்து பரபரப்பை கிளப்பி வரும் மதுரவீரன் சிங்கள் “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல்

V ஸ்டுடியோஸ் மற்றும் P.G மீடியா வொர்க்ஸ் வழங்கும் திரைப்படம் மதுரைவீரன். விஜி சுப்ரமணியன் தயாரிப்பில் , சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியுள்ளார் P.G.முத்தையா.

இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் “ என்ன நடக்குது நாட்டுல “ இன்று காலை 11மணியளவில் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் புரட்சிகரமாக இந்த பாடல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றும் இந்த பாடலை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பாடலிலிருந்து சில வரிகள்

“ கொள்ளை அடிச்சவன் கூட்டுல,
நம்ம குடும்பம் நிக்குது ரோட்டுல.
எதையும் நாம பாக்காம எதுத்து கேள்வி கேக்காம ,
அடங்கி ஒடுங்கி கிடப்பதால ஆளுக்காளு நாட்டாம.“

போன்ற பல புரட்சிகரமான வரிகளோடு “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல் வெளிவந்து பரபரப்பை கிளப்பியுள்ளது . இந்த பாடல் வெளியாவதற்கு முன்னரே என்ன நடக்குது நாட்டுல என்ற ஹாஷ் டேக்கில் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் பற்றி ட்வீட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Back To Top
CLOSE
CLOSE